பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு: என்ன செய்யணும்... முழு விபரங்கள் இதோ!!!
மென்பொருள் பொறியாளர் பயிற்சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்குங்க. அருமையான இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

தஞ்சாவூர்: பெல் என்று அழைக்கப்படும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மென்பொருள் பொறியாளர் பயிற்சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்குங்க. அருமையான இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிச்சு இருக்காங்க. சரியான சான்ஸ் உடனே காலதாமதம் இல்லாம விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.
பணி: சீனியர் சாப்ட்வேர் டிரெய்னி - I, காலியிடங்கள்: 15, வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.35,000, தகுதி: கணினி அறிவியல் பிரிவில் முதுகலை, எம்சிஏ முடித்திருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150 + 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
பணி: ஜூனியர் சாப்ட்வேர் டிரெய்னி –I, காலியிடங்கள்: 15, வயது வரம்பு: 26-க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. 25,000, தகுதி: கணினி அறிவியல் , ஐடி பிரிவில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100 + 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
பணி: சாப்ட்வேர் ப்ரொபஷனல்ஸ் (Software Professionals-I): காலியிடங்கள்: 10, வயதுவரம்பு: 40--க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. 60,000
தகுதி: கணினி அறிவியல், ஐடி, ஏஐ, டேட்டா அறிவியல் மற்றும் டெக்னாலஜி, பிரிவில் பிஇ, பி.டெக் முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: ரூ. 450 + 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.6.2025. இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் திறமையை வெளிப்படுத்தி வேலை வாய்ப்பை பெறுங்கள். கடைசி நாள் வரை காத்திருக்காமல் இன்றே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்கள்.





















