’’கூட்டணி கட்சியினர் மனம் நோகாமல் அரவணைத்து செல்ல வேண்டும்’’- அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேச்சு
’’விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கவனமாக கையாண்டு, அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றி 100 சதவீத வெற்றியை நாம் பெற அயராது உழைக்க வேண்டும்’’
மயிலாடுதுறையில் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.முருகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று கட்சி நிர்வாகிகளிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: ஒரு முதலமைச்சர் எவ்வளவு உழைக்க முடியுமோ அதைவிட அதிகமாக தமிழ்நாடு முதல்வர் உழைப்பதாகவும், முதல்வரின் கடின உழைப்பை உயர்நீதிமன்றமே பாராட்டியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற உத்தரவின் மூலம் அனைவரின் பாராட்டுதல்களையும் தமிழ்நாடு முதல்வர் பெற்றுள்ளார். முதல்வருக்கு பெருமை சேர்க்கும் வகையில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கவனமாக கையாண்டு, அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றி 100 சதவீத வெற்றியை நாம் பெற அயராது உழைக்க வேண்டும். அதேபோன்று நம்முடன் இருக்கும் கூட்டணி கட்சியினரின் மனம் நோகாமல் அவர்களை அரவணைத்து செல்ல முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
samantha | Oo Antava| ‛கவர்ச்சியாக இருப்பது அடுத்த கட்ட கடினமான வேலை’ - சமந்தா புது விளக்கம்!
சட்டமன்றத் தேர்தலில் சிறந்த வேட்பாளர்களை தேர்வு செய்து வெற்றி பெற்றதைப் போன்றே, உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களுக்கான பட்டியலும் முதல்வரிடம் உள்ளது. மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பல ஆண்டுகளாக பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை முறையாக அமைக்கப்படாததே காரணம். தற்போது இந்த பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண இதற்காக 150 கோடி ரூபாயில் புதிய பாதாள சாக்கடைத் திட்டம் தமிழ்நாடு முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் பெற்றுத்தரப்படும் என்றார்.
மேலும் தொடர்ந்து பேசியவர், மயிலாடுதுறையை அடுத்த மூங்கில்தோட்டம் பகுதியில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான 14 ஏக்கர் நிலத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக பத்திரப் பதிவு செய்யப்பட்டுவிட்டது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணியை தமிழக முதல்வர் தொடங்கி வைப்பார் என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Gold-Silver Rate, 21 Dec: சென்னையில் குறைந்தது தங்கம்... எவ்வளவு... முழு விபரம் இதோ!