Bigg Boss 5 Tamil: ‛ஆரம்பிச்சுட்டாங்க... இனி இந்த வாரம் முழுதும் அழுகை தான்...’ பிக்பாஸ் வீட்டில் உறவுகள்!
Bigg Boss 5 Tamil: 75 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், டாப் 10 போட்டியாளர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து அவர்களை சந்திக்கும் நேரம் இது!
Bigg Boss 5 Tamil Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமானை அடுத்து டிசம்பர் 19-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் அபினய் எலிமினேட்டாகி வெளியேறினார்.
இந்நிலையில், இந்த வாரத்தின் முதல் நாளான இன்று தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி நடைபெற்றது. இதில், இந்த வாரத்தின் தலைவராக தாமரைச்செல்வி நியமிக்கப்பட்டார். அதனை அடுத்து, 79வது நாளுக்கான முதல் ப்ரொமோ சற்றுமுன் வெளியானது. பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றுள்ளது. டாப் 10 போட்டியாளர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து அவர்களை சந்திக்கும் நேரம். இந்த ஃப்ரீஸ் டாஸ்க்கில், ஃப்ரீஸ், ரிலீஸ், லூப், ரீவைண்ட் என நான்கு அறிவிப்புகள் வருவதற்கு ஏற்ற நடந்து கொள்ள வேண்டும் என பிக் பாஸ் அறிவித்திருக்கிறார். இதனால், இன்றைய எபிசோட் நெகிழ்ச்சியாகவும், கண்ணீர், ஆனந்தம் என உணர்வுப்பூர்வமாக இருக்கும் என தெரிகிறது.
ப்ரொமோ:1
#Day79 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/A1yhKuqCfc
— Vijay Television (@vijaytelevision) December 21, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்