மயிலாடுதுறையில் ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்
’’ஒவ்வொரு குழந்தையும் சுமார் ஒன்றரை கிலோ எடை மட்டுமே இருந்த காரணத்தால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கண்காணிப்பு பிரிவில் இன்குபேட்டரில் வைத்து குழந்தைகளை பாதுகாத்து வந்தனர்’’
ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறப்பது சாதாரண நிகழ்வாக இருந்து வருகிறது. இருப்பினும் இரட்டை குழந்தைகள் பிறந்தாலே பெரும்பாலும் ஆட்சியுடன் பார்க்கப்படும் உலகில், மேலும் ஆச்சரியத்தை உருவாக்கும் விதமாக அவ்வப்போது ஒரே பிரசவத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் கனவிலும் நினைத்து கூட பார்க்காத அளவிற்கு குழந்தைகளை பெற்றெடுக்கும் அதிசய நிகழ்வு அவ்வப்போது நடந்தேறி வருகிறது. அவ்வாறான ஒரு நிகழ்வு தான் மயிலாடுதுறையில் நடந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா செம்பியன் வேலன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செழியன் (32). இவரது மனைவி 30 வயதான ஆர்த்தி. இவர்களுக்கு இந்த கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது உள்ளது. இதையடுத்து கருவுற்ற ஆர்த்திக்கு சீர்காழி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை செய்ததில் அவரது வயிற்றில் 3 கருக்கள் வளர்வது தெரியவந்தது. இதனை அறிந்த அவர்களது உறவினர்கள் ஆர்த்தியை கண்ணும் கருத்துமாக பார்த்து கவனித்து வந்தனர்.
இந்நிலையில் எட்டு மாதங்கள் கடந்த நிலையில் பிரசவ தேதிக்கு முன்னராகவே ஆர்த்திக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பிரசவ வலியால் துடித்த ஆர்த்தியை அவரை உறவினர்கள் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் மயிலாடுதுறை மருத்துவமனைக்கு பரிந்துரைத்தது ஆர்த்தியை அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட ஆர்த்திக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 அழகான பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இந்நிலையில் ஒவ்வொரு குழந்தையும் சுமார் ஒன்றரை கிலோ எடை மட்டுமே இருந்த காரணத்தால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கண்காணிப்பு பிரிவில் இன்குபேட்டரில் வைத்து குழந்தைகளை பாதுகாத்து வந்தனர். 10 நாட்கள் கடந்த நிலையில் குழந்தைகள் உடலில் முன்னேற்ற அடைந்ததை தொடர்ந்து ஆர்த்தி மூன்று குழந்தைகளுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை அவரது உறவினர்கள் மகிழ்ச்சியுடன் காரில் வீட்டிற்கு அழைத்து சென்றனர். ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்ததை மருத்துவமனையில் அவர்களுடன் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த சக தாய்மார்கள் ஆச்சரியத்துடன் கண்டனர்.
எத்தனை பேரு என் பொண்ண செதப்பீங்க' - கதறிய தாய், ராமநாதபுரத்தில் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்