Amazon Prime Video | அமேசானில் வெளியாகும் படங்களை வாடகை எடுப்பதும், டவுன்லோட் செய்து பார்ப்பதும் எப்படி?
அமேசான் ப்ரைம் வீடியோவில் வீடியோக்களை வாடகைக்கு எடுத்து, டவுன்லோட் செய்தும் பார்ப்பது எப்படி என்று விளக்குகிறதுக்கு இந்த செய்தி தொகுப்பு:
அமேசான் பிரைம் வீடியோவில் எல்லா திரைப்படங்களையும் இலவசமாக காண்பதற்கு சப்ஸ்க்ரைப் செய்வதற்கான தேவை சிலருக்கு இருக்காது, அவர்கள் உறுப்பினர் ஆகாமலேயே பிரைம் வீடியோ திரைப்படங்கள் மற்றும் டிவி ப்ரோக்ராம்களை வாடகைக்கு எடுக்கலாம். பிரைம் வீடியோ சேவையை எவ்வாறு வாடகைக்கு எடுப்பது என்பது குறித்து இங்கே.
நீங்கள் அமேசான் இணையதளம், மொபைல் ஆப் அல்லது பிரைம் வீடியோ ஆப்ஸை தொலைக்காட்சியில் பயன்படுத்தினாலும் வீடியோவை வாடகைக்கு எடுப்பதற்கான செயல்முறை அடிப்படையில் ஒன்றுதான். நீங்கள் எங்கு வாடகைக்கு எடுத்தாலும், அதே Amazon அக்கவுண்ட் இணைக்கப்பட்டுள்ள எந்த சாதனத்திலும் வீடியோவை தொடர்ந்து பார்க்கலாம்.
- பிரைம் வீடியோ இணையதளத்தை வெப்சைட்டில் திறந்து உங்கள் அமேசான் கணக்கில் உள்நுழையவும் அல்லது நீங்கள் விரும்பும் சாதனத்தில் பிரைம் வீடியோ பயன்பாட்டைத் தொடங்கவும்.
- நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோவைக் கண்டறியவும். நீங்கள் பிரைம் வீடியோவின் வகைகளை கொண்டு தேடலாம். தலைப்பு, ஜானர், நடிகர் அல்லது இயக்குனர் மூலம் வீடியோக்களைக் கண்டறிய செர்ச் ஆப்ஷனை பயன்படுத்தலாம்.
- வீடியோவின் விவரங்கள் இருக்கும் பக்கத்தை திறந்தால், ரென்டல் ஆப்ஷனை தேர்வு செய்யலாம். வீடியோ இலவசமாக இருந்தால், வாட்ச் நவ் அல்லது பிளே விடியோ என்ற ஆப்ஷனை தேர்வு செய்து பார்க்க தொடங்கலாம். இல்லையெனில், வீடியோவை வாடகைக்கு எடுக்க ஆப்ஷன்கள் இருக்கும், சில சமயங்களில் ஸ்டாண்டர்ட் டெஃபினிஷன் (SD), ஹை டெஃபினிஷன் (HD) அல்லது 4K UHD போன்ற விடியோ க்வாலிட்டி ஆப்ஷன்கள் இருக்கும்.
- நீங்கள் பிரைம் வீடியோவிற்கு பாதுகாப்பு பின் கொடுத்திருந்தால், வாடகை எடுக்க அந்த பின்னை உள்ளிட வேண்டும்.
- நீங்கள் ஒரு வீடியோவைத் தேர்வு செய்தவுடன், அது வாடகைக்கு எடுக்கப்பட்டு உடனடியாகப் பார்க்கக் கிடைக்கும். உங்களின் அனைத்து பிரைம் வீடியோ உள்ளடக்கமும் பார்ப்பதற்குத் தயாராக இருப்பதைக் கண்டறிய, 'மை ஸ்டஃப்' என்பதைத் தேர்ந்தெடுத்து, 'பர்சேசஸ்' டேபை தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் ஒரு திரைப்படத்தை வாடகைக்கு எடுத்தவுடன், அதைப் பார்க்கத் தொடங்க உங்களுக்கு 30 நாட்கள் கால அவகாசம் உண்டு. நீங்கள் பார்க்க ஆரம்பித்தவுடன், 48 மணிநேரத்திற்கு வரம்பற்ற அணுகல் தொடங்கும். 48 மணிநேரம் முடிந்த பிறகு, வாடகை காலாவதியாகும்.
விமானம் அல்லது கேம்பிங் போன்ற இணைய அணுகல் இல்லாத எங்காவது வீடியோவைப் பார்க்க நீங்கள் திட்டமிட்டால், உங்கள் ஃபோன் அல்லது டேப்லெட்டில் வீடியோவைப் முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம். உங்களிடம் இணக்கமான சாதனம் இருக்கும் வரை - iOS அல்லது Android சாதனம், Fire டேப்லெட் அல்லது Windows 10 கணினியில் Prime Video ஆப்ஸ் நிறுவப்பட்டிருந்தால் - இணைய இணைப்பு இல்லாதபோதுகூட நீங்கள் டவுன்லோட் செய்து வைத்திருந்த Prime வீடியோக்களை இயக்க முடியும். நீங்கள் கணினியைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், Windows 10க்கான Amazon Prime Video ஆப்பை பயன்படுத்தி மட்டுமே உள்ளடக்கத்தைப் பதிவிறக்க முடியும். இணையதளத்திலோ அல்லது Mac கணினியிலோ உள்ளடக்கத்தைப் பதிவிறக்க முடியாது.
- நீங்கள் பதிவிறக்க விரும்பும் டிவி ஷோ அல்லது திரைப்படத்தைத் தேடவும். வீடியோவின் விவரங்கள் பக்கத்தைத் திறக்கவும். இது பதிவிறக்கம் செய்யக் கிடைத்தால், கீழ்நோக்கிய அம்புக்குறி போல் இருக்கும் பதிவிறக்க பட்டன் இருக்கும்.
- திரைப்படத்தைப் பதிவிறக்க, பதிவிறக்க அம்புக்குறியைத் தட்டவும்.
- டிவி நிகழ்ச்சியைப் பதிவிறக்க, சாதனத்தில் சேமிக்க விரும்பும் ஒவ்வொரு சாப்டருக்கும் பதிவிறக்க பொத்தானைத் தட்டவும்.
Windows 10 லேப்டாப்பில் வீடியோவைப் பதிவிறக்க முயலும்போது, பதிவிறக்கம் தொடங்கும் முன், WIndows 10க்கான Prime Video ஆப்பை நிறுவ வேண்டும். Windows பக்கம் அமேசான் பிரைம் வீடியோ தானாகவே திறக்கும் - 'கெட்' என்பதைக் கிளிக் செய்து, ஆப் இன்ஸ்டால் ஆகும் வரை காத்திருக்கவும்.
நீங்கள் ஒரு வீடியோவைப் பதிவிறக்கியவுடன், பிரைம் வீடியோவின் பதிவிறக்கங்கள் டேபில் இருந்து அதைப் பார்க்கலாம்.
- பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோவை காண சாதனத்தில் Prime Video ஆப்பை தொடங்கவும்.
- திரையின் கீழே உள்ள 'டவுன்லோட்ஸ்' என்பதைத் தட்டவும்.
- பார்க்க விரும்பும் வீடியோவைக் கண்டுபிடித்து அதைத் தட்டவும்.
- ஒரு திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்தால், வீடியோவின் விவரங்கள் பக்கத்தைப் பார்ப்பீர்கள். பார்க்கத் தொடங்க 'ப்ளே' என்பதைத் தட்டவும்.
- ஒரு டிவி ஷோவை தேர்ந்தெடுத்தால், நீங்கள் பதிவிறக்கிய எபிசோட்களின் பட்டியலைக் காண்பீர்கள். விவரங்கள் பக்கத்திற்குச் செல்ல நீங்கள் பார்க்க விரும்பும் ஒன்றைத் தட்டவும், பின்னர் Play பொத்தானைத் தட்டவும்.
உங்களிடம் Amazon Prime வீடியோ சந்தா இருந்தால், இலவசமாக வீடியோக்கள் கொட்டி கிடக்கும் லைப்ரரியில் உள்ள அனைத்து வீடியோக்களையும் காணலாம். நீங்கள் பிரைம் வீடியோ உறுப்பினராக இல்லாவிட்டால், வீடியோவின் விவரங்கள் பக்கத்தில் ப்ரைமுடன் $0.00க்கு பார்க்கவும். கூடுதலாக, பிரைம் வீடியோவின் பல நிகழ்ச்சிகள் ஐஎம்டிபி டிவியின் சந்தா மூலம் இலவசமாகக் கிடைக்கின்றன.