தஞ்சை மாணவி மரணம் - 20 பேரிடம் மூன்றரை மணி நேரம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை
’’முன்னாள் மாணவி நிவேதிதா கூறுகையில், தற்போது ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றேன். மதம் மாறச் சொல்லி பள்ளியில் யாரையும் வற்புறுத்தியது கிடையாது’’
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து மாணவியை அதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதான குற்றச்சாட்டில் விடுதிக் காப்பாளர் சகாயமேரியை கைது செய்தனர்.
ஆனால், விடுதிக் காப்பாளர் உள்ளிட்டோர் மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பெற்றோர் புகார் எழுப்பினர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாணவியின் தந்தை முருகானந்தம் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் தஞ்சாவூர் மாவட்ட நீதிபதியால் நியமிக்கப்படும் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் பெற்றோர் ஆஜராகி தங்களது வாக்குமூலத்தைத் தெரிவிக்கலாம் என உத்தரவிட்டது.இதன்படி, தஞ்சாவூர் மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சி. பாரதி முன்னிலையில் மாணவியின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா கடந்த 23ஆம் தேதி ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
இந்த வாக்கு மூல அறிக்கை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, மாணவி பேசியதாகக் கூறப்படும் வீடியோ பதிவை தஞ்சாவூர் வல்லம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, வீடியோ பதிவு கொண்ட செல்போனை தஞ்சாவூர் வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். பிருந்தாவிடம் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அரியலூர் மாவட்டச் செயலர் பி.முத்துவேல் கடந்த 25 ஆம் தேதி ஒப்படைத்தார். இந்நிலையில் இது தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தானே முன் வந்து விசாரணை செய்தது. அதன் படி 31ஆம் தேதி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தலைவர் பிரியங்கா காணூப் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்யாஜினிஆனந்த், மாதுலிக்கா சர்மா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
காலை 8.30 மணி அளவில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜனிடம் 9 மணி வரை விசாரணை செய்யப்பட்டது. பின்னர், 9 மணி முதல் 10 மணி வரை வல்லம் டிஎஸ்பி பிருந்தாவிடமும், 10 மணி முதல் 10.15 வரை லாவனியாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஹேமாஅகிலாண்டேஸ்வரி, ஜீவானந்தம், அஞ்சை, போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவர்கள் அருள்மதிகண்ணன் மற்றும் உதயபாணுவிடம் விசாரணை செய்யப்பட்டது. 10.30 மணிமுதல் 10.50 மணி வரை தஞ்சை மாவட்ட காவல் துறை எஸ்பி ரவளிப்பிரியாகாந்த புனேனியிடமும், 10.22 மணி முதல் 10.31 வரை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் திலகவதியிடம் விசாரணை செய்யப்பட்டது. தொடர்ந்து 10.52 மணி முதல் 11.03 மணி வரை மைக்கேல்பட்டி கிராம மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடமும், 11.04 மணி முதல் 11.08 வரை சேலம் சமூக ஆர்வலர் பீயூஸ்மானுாசிடமும், தொடர்ந்து அரியலுார் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் முத்துவேல், சமூக ஆர்வலர் ஜீவக்குமார் என 20 பேரிடம் விசாரணை செய்யப்பட்டது. காலை 8.30 மணியளவில் தொடங்கிய விசாரணை 12 மணிக்கு முடிவடைந்தது.
அப்போது முத்துவேல் பதிவு செய்த மாணவி பேசிய பதிவை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் கேட்டனர். பின்னர், வீடியோ பதிவை,கூடுதல் ஆட்சியர் சுகபுத்ராவிடம் வாட்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அதிகாரிகள், ஹிந்தியில் கேட்ப்பட்ட கேள்விகளை, கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, தமிழாக்கம் செய்து, விசாரணை செய்தவர்களிடம் தெரிவித்தார். பின்னர், விசாரணை செய்த தமிழில் கூறியதை, ஹிந்தியில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அதிகாரிகளிடம் விளக்கினார்.பின்னர் 12 மணி அளவில் விசாரணை முடித்து விட்டு, பள்ளிக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
முன்னாள் மாணவி நிவேதிதா கூறுகையில், நான் இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவி, தற்போது ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றேன். 2015 ஆம் ஆண்டு பள்ளியில் படிப்பை முடித்து வெளியேறினேன். இந்த பள்ளியில் தான் எனது பெற்றோர், சகோதரி படித்தனர். மதம் மாறச் சொல்லி பள்ளியில் யாரையும், வற்புறுத்தியது கிடையாது. அவர்கள் மதம் மாற வேண்டும் என கூறினாலும், நாம் மாற முடியாது என்பது நமக்கே தெரியும். அவர்கள் சொல்லவற்தாக நாம் எப்படி மதம் மாற முடியும். 5 ஆயிரம் பேர் படிக்கும் பள்ளி, இந்த ஒரு மாணவிக்கு மட்டும் இப்படி சம்பவம் நடக்குமா என்பது சந்தேகம் தான். இந்த மாணவியை மட்டும் மதம் மாற வேண்டும் என கூற வேண்டிய அவசயமில்லை என்றார்.
சமூக ஆர்வலர் பியூஸ் மானு கூறுகையில், இது ஒரு கொலை, மாணவி தற்கொலைக்கு முயற்சித்தது உண்மை. மருத்துவமனையில் அட்மிட்டானது உண்மை. மருத்துவமனையில் அனுமதித்த பிறகு, நேரம் கொடுத்த பிறகு, சிஸ்டர் கைது செய்யப்பட்டது பிறகு நடந்தது நாடகம். அந்த மாணவியை ரொம்ப கட்டாயப்படுத்தி, நீ மதமாற்றத்திற்காக தான் சாவுகிறாய் என எழுதிக்கொடு, சொல்லு என கட்டாயப்படுத்தியுள்ளனர். அந்த மாணவி இதற்கு ஒதுக்காத நிலையில், 19 ஆம் தேதி மாணவி இறந்த பிறகு, பா.ஜ.,தலைவர் அண்ணாமலை வீடியோவை வெளியிடுகிறார். தெரிந்தே எடிட்ட வீடியோ வெளியிட்டுள்ளார். அதன்பிறகு, உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இரண்டாவது வீடியோ வெளியில் வந்த பிறகு,பேச்சை அப்படியே மாற்றி, இது தனிப்பட்ட நபரின் பிரச்சனை, மதத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளார்.
இந்த கொலையை அரசு உரியமுறையில் விசாரிக்க வேண்டும் என்றால், அரசு சுகந்திரமாக இருக்க வேண்டும். ஒரு போனை வாங்குவதற்காக ஐகோர்ட் உத்தரவை பெற வேண்டிய நிலை போலீசுக்கு உள்ளது.டெல்லியில், கடந்த 2021ம் ஆண்டு, ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட எரித்து கொலை செய்யப்பட்டார். சிறுமியின் வீட்டிற்கு ஆறுதல் கூற சென்ற ராகுல்காந்தி, சிறுமியின் பெற்றோரை கட்டிபிடித்து ஒரு போட்டோவை ட்விட்டரில் போட்டதற்காக, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை செய்து, சிறுமியின் பெற்றோர் போட்டோவை போட்டதற்காக, ராகுல்காந்தி ட்விட்டரை பிளாக் செய்து விட்டனர். இது தொடர்பாக வழக்கு உள்ளது.
அதை சமயம், இறந்த மாணவி முகத்தை மறைக்காமல் அண்ணாமலை வீடியோ வெளியிட்டார். ஆனால் இது வரை எந்த வழக்கும் அவர் மீது பதிவு செய்யவில்லை. அப்படியாக அண்ணாமலை மீது தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வழக்கு பதிவு செய்தால் தான், மக்களுக்கு நம்பிக்கை வரும், மாணவி விவகாரத்தில் உள்ள உள்குத்து விவகாரங்கள் வெளியே வரும். நிறைய பேர் வெளியே வந்து பல்வேறு ஆதாரங்களை தருவார்கள். ஆனால் தற்போது தமிழக அரசின் கை கட்டப்பட்டு உள்ளது போன்ற நிலைமை உள்ளது. சி.பி.ஐ., தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ஐகோர்ட் போன்றவர்கள் எல்லாம் மத்திய அரசுக்கும், மதவாத கும்பலுக்கும் தொடர்ந்து சப்போர்ட் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இதனால் போலீசார் விசாரிக்க முடியவில்லை. இது மத மாற்றத்திற்காக நடந்த தற்கொலை தான் என திணித்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த திணிப்பு கூடாது. தொடர்ந்து தமிழகத்தில் மதகலவரத்தை துாண்டு செய்யும் செயல் நடக்காது. பா.ஜ., கே.டி., ராகவன் மீது கமலாயாத்தில் நடந்த நிறைய சம்பவங்கள் உள்ளது. அது குறித்து விசாரிக்க ஒரு குழுவை அண்ணாமலை அமைத்தார். அந்த குழு தன்னுடைய அறிக்கையை வெளியிடட்டும். அதன்பிறகு அரசியல் குழு இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு உள்ளே வரட்டும். இதுவரை ஒரு போன் தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் நிறை போன் பறிமுதல் செய்யாமல் உள்ளது. அதை எப்போது பறிமுதல் செய்யவது. அதற்குள்ளாக ஆதாரம் எல்லாம் அழிந்து விடும் என்றார்.
அரியலுார் மாவட்டவிஷ்வ ஹிந்து பரிஷ்த் மாவட்ட செயலாளர் முத்துவேல் நிருபர்களிடம் கூறுகையில், மாணவி விவகாரத்தில் நான் எடுத்த வீடியோ திருப்பு முனையாக உள்ளது. கடந்த 17 ஆம் தேதி என்னுடைய நண்பர் மகாலிங்கம் எனக்கு போன் செய்து, என்னுடைய உறவினர் ஒருவர் தஞ்சாவூர் மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோர் விபரம் தெரியாத நபர்கள்.அவர்களிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று வருகிறார்கள். யாரையும் அனுமதிக்க மறுக்கிறார்கள் என உதவி கேட்டார். அதன்பிறகு 3 மணிக்கு, மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோருடன் சென்றேன். அப்போது இறந்த மாணவியின் சித்தி பலரும் வீடியோ எடுப்பதாக கூறினார்.
ஆனால் எங்களிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை, எனவே, நீங்களும் ஒரு வீடியோ எடுத்து தர சொல்லி கேட்டார்கள். உள்ளே சென்று அந்த பெண்ணிடம் வீடியோ எடுத்தேன். இரண்டு வீடியோ எடுக்கப்பட்டது. முதல் வீடியோ எடுத்துக்கொண்டு இருக்கும் போது, அந்த மாணவிக்கு மூச்சுதிணறல் ஏற்படுகிறது. அதனால், வீடியோ எடுப்பதை கட் செய்து விட்டு, பின்னர் மாணவி நார்மலான நிலைக்கு வந்த பிறகு திரும்ப வீடியோ எடுத்தேன். இரண்டு வீடியோக்களும் தனி தனி கிடையாது. ஒரு வீடியோ தான். அதன் பிறகு என்னுடையே முக்கியமான நண்பர்களுக்கு அனுப்பினேன். அரியலுார் போலீசாரிடம் இது பற்றி கூறி போது போலீஸ் முறையான ஒத்துழைப்பு அளிக்கவில்லை. பின்னர், மாணவியின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், 19ம் தேதி மாணவியின் ஊர் மக்கள் சுமார் 300 இணைந்து அன்று காலை உண்ணாவிரதம் இருந்தோம்.
இறந்த மாணவியிடம் இரண்டு வீடியோவும், அவரின் சித்தியிடம் இரண்டு வீடியோவும் எடுத்தேன். அந்த வீடியோவை, மாணவி இறந்த பிறகு போலீசாரிடம் கொடுக்க முயன்றோம். அவர்கள் அதை வாங்கிக்கொள்ள தயாராக இல்லை. எங்கள் புகாரையும் படித்து பார்க்கவில்லை. போலீசார் யாருடன் அழுத்ததின் பெயரிலேயோ, எங்கள் நிர்வாகிகளை அசிங்கப்படுத்தி அனுப்பி விட்டனர். இரண்டாவது வீடியோ ஒரு தனியார் சேனலில் வெளியானது. அது தொடர்பாக அவர்களிடம் தான் யார் கொடுத்தது என கேட்ட வேண்டும். போலீசார் சரியான முறையில், எல்லா வழியிலும் விசாரணை நடத்த வேண்டும். அவர்கள் அழுத்ததின் பெயரில் விசாரித்து வருகின்றனர். சித்தி கொடுமை, மதமாற்றம் என எல்லா வழியிலும் விசாரிக்க வேண்டும். ஆனால், மதமாற்றம் விஷயத்தை மட்டும் ஏற்க மறுகிறார்கள். அந்த மாணவி இறப்பது முன்பு எடுக்கப்பட்ட வீடியோ என்பதால், அதை மாணவியின் மரண வாக்குமூலமாக தான் போலீசார் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
மாணவியின் தாய் கனிமொழியின் தந்தை சுப்பிரமணியன் மற்றும் தாய் மங்கையர்கரசி கூறுகையில், எனது மகள் கனிமொழி மர்மமான முறையில் இறந்தார். கனிமொழிக்கு இறந்த மாணவி மற்றும் சந்துரு (15) மற்றும் ராம்குமார் (17) என இரண்டு மகன்கள் உள்ளனர். கனிமொழி இறந்த பிறகு அவர்களிடம் பேச்சு வார்த்தை கிடையாது. அவர்கள் மூன்று பேரையும் வேற பள்ளியில் படிக்க வைத்தார்கள். எங்களது பேத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கின்றார் என தகவல் கிடைத்தவுடன் ஒடி சென்று பார்த்தோம். எனது பேத்தி இறந்தது எப்படி என்ற காரணம் தெரிய வேண்டும். மீதமுள்ள மாணவிவின் தம்பிகளை நல்லபடியாக பார்த்து கொள்ள வேண்டும். நாங்கள் அவர்களது வீட்டிற்கு செல்ல மாட்டோம். எனது பேத்தியின் கைகள் மற்றும் கன்னத்தில். சித்தி, சரண்யா சூடு போட்டுள்ளார். வீட்டிலிருந்து காசு காணாமல் போய் விட்டது, அந்த காசை மாணவி தான் எடுத்தார் என்று கூறி, மாணவிவின் உள்ளங்களையில் இரண்டு முறை சூடம் ஏற்றினார். ஆனால் மாணவி காசு எடுக்க வில்லை என்று கூறியுள்ளார். போலீசாரிடம் கூறும் போது, மாணவியின் பாட்டி கீழே விழுந்து விட்டார் என்று கூறியுள்ளார் என்றார்.