மேலும் அறிய

Thanjavur: 10 புதிய தயாரிப்புகள்... சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் நடந்த கிளஸ்டர் மாநாட்டில் அறிமுகம்..!

தஞ்சாவூர் அருகே திருமலை சமுத்திரம் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு பயோநெஸ்ட் தொகுப்பின் (கிளஸ்டர்) இரு நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் 10 புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு பயோநெஸ்ட் தொகுப்பின் (கிளஸ்டர்) இரு நாள் மாநாடு நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் 10 புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.

மாநாட்டை பைராக் பயோடெக் துறைக்கான தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் மேக் இன் இந்தியா வசதிப் பிரிவுத் தலைவர் மணீஷ் திவான் தொடக்கி வைத்து பயோநெஸ்ட் தொகுப்பு தொழில் வளர்ப்பகங்களின் கிளின் கிரீன் டெக், மீளுருவாக்க மருத்துவம், நோயறிதல், உணவு தர மதிப்பீடு, உதவி சாதனங்கள் தொடர்பாக 10 புதிய தயாரிப்புகளை வெளியிட்டார். பின்னர் அவர் பேசுகையில், இந்தத் தயாரிப்பு வெளியீடுகள் வெற்றிகரமானவை. தொழில் வளர்ப்பகங்களில் தமிழ்நாடு தொகுப்பின் ஒருங்கிணைந்த முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்றார் அவர்.

புதிய தயாரிப்புகளாக உணவு சேமிப்புக் கிடங்கில் இருப்பு வைக்கப்படும் உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகளின் தரத்தைக் கண்காணிப்பதற்கான நவீன சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் வீணாவதை முன்கூட்டியே அறிந்து, தடுப்பதற்கு இந்த கரும்  பெரும் உதவியாக இருக்கும். உணவு தானியங்களைக் கிடங்கில் எவ்வளவு காலம் வைத்துக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளும் விதமாக இந்த நவீன சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அதிநவீன சக்கர நாற்காலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்தச் சக்கர நாற்காலியில் செல்போன் வாயிலாக முன்னும், பின்னும் செல்லுதல், இடது, வலது புறம் திரும்புதல் போன்றவற்றை வாய்ஸ் ரெக்கார்ட்டிங் செய்து பயன்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மின்னணு சாதனங்களை பேக்கிங் செய்யும்போது பயன்படுத்தப்படும் தெர்மோகோல் பொருள்களுக்கு பதிலாக விவசாயக் கழிவுகளான வைக்கோல், வெல்லப்பாகு, காளான் உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தக்கை அறிமுகம் செய்யப்பட்டது. தெர்மோகோலை விட மிகவும் பாதுகாப்பான இந்தத் தக்கை மறுசுழற்சி செய்யக்கூடியவை. சுற்றுச்சூழலையும் பாதிக்காத இந்தத் தக்கை மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாயும் கிடைக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போன் மூலம் காற்று மாசுப்பாட்டை கண்டறிவதற்கான சாதனமும் அறிமுகம் செய்யப்பட்டது.

சாஸ்த்ராவின் அப்லெஸ்ட் தலைமை நிர்வாக அலுவலர் அனுராதா பேசுகையில், இந்த விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட தயாரிப்புகள் கோல்டன் ஜூப்ளி மகளிர் பூங்கா, வி.ஐ.டி., தானுவாஸ், சுகாதார தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம், சென்னை ஐ.ஐ.டி., தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி, திருப்பதி எஸ்.பி.எம்.வி.வி. ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டவை என்றார்.

தமிழ்நாடு பயோநெஸ்ட் தொகுப்பின் தலைமை நிர்வாக அலுவலர் முத்து சிங்காரம் பேசுகையில், இத்தொகுப்பில் 417 தொழில் வளர்ப்பகங்கள் உள்ளன. இந்தத் தொகுப்புக்கு இதுவரை 24 காப்புரிமைகள் கிடைத்துள்ளன என்றார்.

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக முதன்மையர் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

கேங்மேன் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது? தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
கேங்மேன் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது? தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்... எதிர்ப்பு தெரிவிக்கும் ஓய்வூதியர்கள்: காரணம் என்ன?
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்... எதிர்ப்பு தெரிவிக்கும் ஓய்வூதியர்கள்: காரணம் என்ன?
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
தெருநாய்களுக்கு வெறிநாய் கடி சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம்: கும்பகோணத்தில் அதிரடி நடவடிக்கை
தெருநாய்களுக்கு வெறிநாய் கடி சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம்: கும்பகோணத்தில் அதிரடி நடவடிக்கை

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Embed widget