மேலும் அறிய

எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்க வேண்டும் - தெலுங்கானா ஆளுநர் அறிவுரை

வாக்காளர்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்க வேண்டும் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னை, விருகம்பாக்கம் தொகுதியின் வாக்காளராக உள்ளார். இதையடுத்து, இன்று விருகம்பாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது கணவருடன் தமிழிசை சவுந்திரராஜன் வாக்களித்தார்.

பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், "இன்றைய தினம் நம் நாட்டுக்கு பெருமைமிகு தினம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் பாரத தேசத்தில் இன்று தமிழகத்திற்கும் புதுவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. நான் தமிழக வாக்காளர் என்ற முறையில் காலையில் நானும் எனது கணவர் சவுந்தரராஜனும் வாக்கு செலுத்திவிட்டு புதுவைக்கு விரைந்து கொண்டிருக்கிறோம்.

எனது வேண்டுகோள் வாக்காளர்கள் 100% முகக்கவசம் அணிய வேண்டும். 100% வாக்குகள் பதிவாக வேண்டும். தயவு செய்து முகக்கவசம் அணிந்து வாருங்கள். வாக்குச்சாவடியில் கையுறைகள் வழங்கப்படுகின்றன. தயவுசெய்து கையுறைகளை வாக்களித்தபின் கவனமாக, கண்ட இடங்களில் போடாமல் அதை சரியாக குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு செல்லுங்கள். வரிசையில் நிற்கும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோன்று எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிப்பது முக்கியம். கூட்டம் வருவதற்கு முன்னால் வந்து அமைதியாக காத்திருந்து வாக்களியுங்கள். வாக்குச்சாவடிகளில் வயதானவர்களுக்கு தண்ணீர் கொடுங்கள். ஆளுநராக அல்ல, வாக்காளராக சொல்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.“

இவ்வாறு அவர் கூறினார்.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: சீமான் பேச்சு நகைச்சுவை - அமைச்சர் வன்னியரசு !
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: சீமான் பேச்சு நகைச்சுவை - அமைச்சர் வன்னியரசு !
காசு இல்லாமல் TNPSC, IBPS தேர்வுகளுக்கு இனி ஈசியா படிக்கலாம் அரசு தரும் பொன்னான வாய்ப்பு!
காசு இல்லாமல் TNPSC, IBPS தேர்வுகளுக்கு இனி ஈசியா படிக்கலாம் அரசு தரும் பொன்னான வாய்ப்பு!
புதுச்சேரியில் ஒரே மாதத்தில் 25,213 பேருக்கு அபராதம்! போக்குவரத்து போலீசார் அதிரடி - முழு விவரம்!
புதுச்சேரியில் ஒரே மாதத்தில் 25,213 பேருக்கு அபராதம்! போக்குவரத்து போலீசார் அதிரடி - முழு விவரம்!
மயிலாடுதுறை மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ!
மயிலாடுதுறை மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு: யார் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
ஓமன் அருகே வணிகக்கப்பல் மீது தாக்குதல்! - இந்திய மாலுமி பலியான சோகம்!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Embed widget