சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய பிடிஆர்! கேள்வியெழுப்பிய இபிஎஸ்! விளக்கமளித்த அப்பாவு!
சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து பேச அனுமதிக்கவில்லை என்று இன்றும் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
நேற்று சட்டப்பேரவையில் ஓபிஎஸ் பேசிக்கொண்டிருக்கும்போது நிதியமைச்சர் வெளியேறியதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அலுவல் நிமித்தமாகவே நிதியமைச்சர் அவையிலிருந்து வெளியேறியதாக சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்துள்ளார். ஓபிஎஸ் விவகாரம் குறித்து பிரச்னை எழுப்பிய எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு பதில் அளித்தார்.
சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து பேச அனுமதிக்கவில்லை என்று இன்றும் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். ஓபிஎஸ் கருத்துக்கு பதிலளிக்காமல் நிதியமைச்சர் வெளியேறுவதா? எனக் கேள்வி எழுப்பிய இபிஎஸ், அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்தை நிதிமைச்சர் ஏற்க மறுக்கிறார் என்று பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கமளித்தார்.
மேலும், அதிமுக ஆட்சியில் 97 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடரும் என்றும் கூறினார்.
பொதுபட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று பதிலுரை அளித்தார். அதில், 10ஆம் வகுப்பு படித்து விட்டு பாலிடெக்னிக், ஐடிஐ படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவிகள், உயர்கல்வியில் சேரும்போது மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று என்று பட்ஜெட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக், ஐடிஐ படிக்கும் மாணவிகளுக்கு அரசு அறிவித்த தொகை கிடைக்குமா? என்று சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது அமைச்சர் அதற்கு விளக்கமளித்தார்.
#BREAKING | 10ம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 நிதியுதவி https://t.co/wupaoCQKa2 | #PTRPalanivelThiyagarajan #TNGovt #Colleges pic.twitter.com/qu6IUIvYiQ
— ABP Nadu (@abpnadu) March 24, 2022
முன்னதாக, காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்றும், நிதித்துறையில் ஒற்றைச்சாளர முறை கொண்டு வரப்படும் எனவும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்