Vikravandi Toll Fee Hike: இன்று முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு; திணறும் வாகன ஓட்டிகள்! கட்டண விவரம் உள்ளே!
Toll Fee Hike: சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.45 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக செலுத்த வேண்டி உள்ளது.
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு ( Vikravandi Toll Plaza, Villupuram )
விழுப்புரம் : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் (Vikravandi Toll Plaza) இன்று (செப்டம்பர் 1ம்) தேதி சுங்க வரியில் மாதாந்திர கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. 5 சதவீதம் வரை இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில்,இன்று முதல், ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் இந்த சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.45 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தை விட கூடுதலாக செலுத்த வேண்டி உள்ளது.
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வரும் 1ம் தேதி அமல்படுத்தப்படவுள்ள கட்டண விபரம்:
கார், ஜீப், பயணிகள் வேன்:
ஒரு வழி பயணம் ரூ.105, பலமுறை பயணம் ரூ.155, மாத கட்டணம் ரூ.3,100 (பழைய கட்டணம் ரூ.3,090).
இலகு ரக வாகனம்:
ஒரு வழி பயணம் ரூ. 180, பல முறை பயணம் ரூ. 270, மாத கட்டணம் ரூ,5,420 (பழைய கட்டணம் 5,405).
லாரி, பேருந்து:
ஒரு வழி பயணம் ரூ.360, பலமுறை பயணம் ரூ.540, மாத கட்டணம் ரூ.10,845 (பழைய கட்டணம் 10,815).
பல அச்சு வாகனம்:
ஒரு வழி பயணம் ரூ.580, பல முறை பயணம் ரூ. 870
மாத கட்டணம் ரூ.17,425 (பழைய கட்டணம் ரூ.17,380):
பள்ளி பேருந்து: மாத கட்டணம் ரூ.1000 (ரூ.1,000).
உள்ளூர் வாகன கட்டணம், வகை-1: மாத கட்டணம் ரூ.150
உள்ளூர் வாகன கட்டணம், வகை-2: மாத கட்டணம் ரூ.300.
இதில் தினசரி பயணத்திற்கான கட்டணத்தில் மாற்றமின்றி, மாதாந்திர கட்டணத்தில் மட்டும் 5 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.