Top 10 News: அமலுக்கு வந்த புதிய ரீசார்ஜ் திட்டங்கள், ரூ.15,000 கோடி சொத்துக்கு ஆப்பா? டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல். ஆளுநரின் ஒப்புதலை அடுத்து சட்ட மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட உள்ளது. பாலியல் வழக்குகளில் தண்டனையை கடுமையாக்கும் வகையில் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்ட மசோதா நிறைவேற்றம்
தபால் வாக்குப்பதிவு தொடங்கியது..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. 12-D படிவம் அளித்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் வரும் 27ம் தேதி வரை தபால் வாக்குகள் பெற்றப்பட உள்ளது. தொடர்ந்து வரும் பிப்ரவரி 5ம் தேதி, இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது.
ஞானசேகரனிடம் மீண்டும் விசாரணை
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி, வலிப்பு வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஞானசேகரனின் உடல்நிலை சீரானதை தொடர்ந்து மீண்டும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஞானசேகரனின் செல்போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நிலையில் அதில் கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஞானசேகரனால் வேறு ஏதேனும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை.
இன்று முதல் அமலுக்கு வந்த புதிய ரீசார்ஜ் திட்டங்கள்
வாய்ஸ் கால் மற்றும் SMS சேவைக்கு தனித்தனியே ரீசார்ஜ் செய்யும் திட்டங்களை அறிமுகப்படுத்தியது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள். பயனர்களுக்கு உள்ள சுமையை குறைக்கும் வகையில் தனித்தனியான ரீசார்ஜ் செய்யும் முறையை அறிமுகப்படுத்த டிராய் உத்தரவிட்டு இருந்தது.
மனைவியின் உடலை சமைத்த கணவர்
ஐதராபாத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி அதை பிரஷர் குக்கரில் வேகவைத்த முன்னாள் ராணுவ வீரர். மகளை காணவில்லை என பெற்றோர் புகாரளிக்க, போலீசாரின் விசாரணையில் கணவர் வேகவைத்த உடல் பாகங்களை ஏரியில் வீசியதாக தெரிவித்துள்ளார்.
2025 பட்ஜெட்டில் வரி விலக்கு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!
2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட இருப்பதாக தகவல். ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான வருமானத்துக்கான வரி விதிப்பை 30%-ல் இருந்து 25%ஆக குறைக்க அரசு திட்டம் என கூறப்படுகிறது. தற்போது உள்ள புதிய வரி விதிப்பு நடைமுறையின் கீழ், ஆண்டுக்கு ரூ.7.75 லட்சம் வரை சம்பளம் வாங்கும் வரி செலுத்துவோருக்கு எந்த வரியும் இல்லை. ஆண்டுக்கு ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோர், அதிகபட்ச வரி அடுக்கான 30%-ன் கீழ் வருகிறார்கள்
பரம்பரை சொத்துக்களை இழக்கும் சயீஃப் அலிகான் குடும்பம்?
நடிகர் சயீஃப் அலிகானின் மூதாதையரான பட்டோடி குடும்பத்துக்கு சொந்தமான ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஒன்றிய அரசு கையகப்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சயீஃப்-ன் மூதாதையர்கள் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்ததால், அவை எதிரி சொத்துக்களாக கருதப்பட்டன. 2016ல் பட்டோடி குடும்ப சொத்துக்களில் வாரிசுகள் உரிமை கொண்டாட முடியாது என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தடை கோரி, சயிஃப் அலிகான் தாக்கல் செய்திருந்த மனுவை கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
லாஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் காட்டுத்தீ பரவியதால் பதற்றம்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மீண்டும் காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிவதால் அப்பகுதியை சுற்றியுள்ள 31,000 மக்களை வெளியேற்ற உத்தரவு. ஏற்கனவே அப்பகுதியில் 2 முறை காட்டுத்தீ ஏற்பட்டு பெரும் சேதத்தை விளைவித்த நிலையில், இந்த புதிய தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
எதிர்பார்ப்புகளை எகிறவைக்கும் Galaxy S25 Series
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Samsung S25 Series ஸ்மார்ட் போன்கள் நேற்று வெளியானது. S25, S25+ மற்றும் S25 Ultra ஆகிய 3 மாடல்கள் அறிமுகம். S25ன் ஆரம்ப விலை ரூ.80,999 ஆகவும், S25+ன் விலை ரூ.99.999 ஆகவும், S25 Ultraன் விலை ரூ.1,29,999 ஆகவும் ர்ணயிக்கப்பட்டுள்ளது. Amazon, Flipkart உள்ளிட்ட தளங்களில் இன்று முதல் விற்பனையாகிறது.
மீண்டும் சொதப்பிய ரோகித்
10 வருடங்களுக்கு பிறகு ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடிய ரோகித் சர்மா 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருவேறு போட்டிகளில் விளையாடிய இந்திய அணியின் முன்னணி வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் கில் தலா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

