நெல் ஜெயராமன் பிறந்தநாள் இன்று: 174 வகை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டவர் 

174 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட நெல் ஜெயராமனின் பிறந்தநாளான இன்று விவசாயிகள் பலர், அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து கொண்டாடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாரம்பரிய நெல் மீட்பாளர் நெல் ஜெயராமன்.  இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மை சீடரும் நெல் ஜெயராமன் தான். தமிழகம் முழுவதும் பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்து வந்த நேரத்தில் அதனை மீட்கும் வகையில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காட்டுயானம் என்கிற பாரம்பரிய நெல் ரகத்தை நெல் ஜெயராமனிடம் கொடுத்தார்.நெல் ஜெயராமன் பிறந்தநாள் இன்று: 174 வகை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டவர் 

 இந்த ஒரு நெல்லிலிருந்து 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த பெருமை நெல் ஜெயராமனை சாரும். குறிப்பாக சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், கருப்புகவுனி, இலுப்பைப்பூ சம்பா உள்ளிட்ட 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த பெருமை நெல் ஜெயராமனை சேரும்.  இதில் பல மருத்துவ குணம் உடைய நெல் ரகங்களும் சாரும். வருடம் தோறும் பாரம்பரிய  நெல் திருவிழாவை தொடர்ந்து நடத்தி வந்தவர் . 12 நெல் திருவிழா இவர் தலைமையில் நடந்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு விழாவிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகளிடம் ஒரு விவசாயிக்கு ஒரு கிலோ பாரம்பரிய நெல் ரகங்களை கொடுத்து அடுத்த ஆண்டு வரும் பொழுது அதனை இரட்டிப்பாக அவர்களிடமிருந்து பெற்று தமிழகம் மட்டுமின்றி கேரளா ஆந்திரா கர்நாடகா என பல மாநிலங்களில் பாரம்பரிய நெல் விவசாயத்தை கொண்டு சேர்த்த பெருமையும் நெல் ஜெயராமனை சாரும்.நெல் ஜெயராமன் பிறந்தநாள் இன்று: 174 வகை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டவர் 
 குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுத்ததற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களின் கையால் அடிதட்டு மக்களுக்காக பணியாற்றி வருகிறார் என்ற விருதைப் பெற்றார். இதே போன்று தமிழக அரசிடம் இருந்தும் விருதுகளை நெல் ஜெயராமன் பெற்றுள்ளார்.  இந்த நிலையில் கடந்த டிசம்பர் 2018ம் ஆண்டு 6ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் நெல் ஜெயராமன். நெல் ஜெயராமன் பிறந்தநாள் இன்று: 174 வகை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டவர் 

இவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழக அரசு நீடாமங்கலத்தில் நெல் ஜெயராமன் பெயரில் நெல் பாதுகாப்பு மையம் தொடங்கப்படும் எனவும் அறிவித்தது. நெல் ஜெயராமன் உயிர் இழந்தாலும் அவருடைய எண்ணமான, பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சி தொடர வேண்டும் என்கிற நோக்கில் சில இளைஞர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். அதுவே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிகள். 

Tags: abp abp nadu abp news nel jeyaraman jeyaraman

தொடர்புடைய செய்திகள்

தூத்துக்குடி : இலங்கைக்கு படகில் தப்பமுயன்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கைது!

தூத்துக்குடி : இலங்கைக்கு படகில் தப்பமுயன்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் கைது!

Tamil Nadu Coronavirus LIVE News :கொரோனா இறப்புகள் முறையாக பதிவு செய்யப்படுகின்றன- மத்திய அரசு

Tamil Nadu Coronavirus LIVE News :கொரோனா இறப்புகள் முறையாக பதிவு செய்யப்படுகின்றன- மத்திய அரசு

”பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்” என்னும் அறிவிப்பு : விமர்சனங்களும், விளக்கங்களும்!

”பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம்” என்னும் அறிவிப்பு : விமர்சனங்களும், விளக்கங்களும்!

தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

கரூர் : அம்மா மருந்தகம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்படுகிறதா? மருந்தக மேலாளர் விளக்கம்..!

கரூர் : அம்மா மருந்தகம் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்படுகிறதா? மருந்தக மேலாளர் விளக்கம்..!

டாப் நியூஸ்

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு - சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு -  சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

வேலூர் : சிலை திருட்டுப்போவதை கேள்விப்பட்டு இருப்பீங்க : இது சிலையை வைத்துவிட்டுப்போன கதை!

Vishnu Vishal Cupping Therapy | கப்பிங் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஷ்ணு விஷால் : வைரலாகும் புகைப்படங்கள்..!

Vishnu Vishal Cupping Therapy  | கப்பிங் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஷ்ணு விஷால் : வைரலாகும் புகைப்படங்கள்..!

ராணிப்பேட்டை : 5  டாஸ்மாக் கடைகளில் தொடர் திருட்டு : ப்ளாக்கில் மது விற்று சொகுசு பைக் வாங்கியவர்கள் கைது..!

ராணிப்பேட்டை : 5  டாஸ்மாக் கடைகளில் தொடர்  திருட்டு : ப்ளாக்கில் மது விற்று சொகுசு பைக் வாங்கியவர்கள் கைது..!