மேலும் அறிய
Advertisement
News Wrap : சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்: ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராகுல் - டாப் செய்திகள்
காலை 6 மணிமுதல் தற்போதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- நீட் தேர்விலிருந்து விலக்கு கோரிய தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர். என். ரவி திருப்பி அனுப்பினார்.
- தமிழ்நாட்டுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த ராகுல் காந்திக்கு நன்றி என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- நீட் விவகாரத்தில் திமுகவின் இயலாமை வெளிபட்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
- திமுக வட்டச்செயலாளர் கொலை வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா:
- ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி சென்றுகொண்டிருந்த கார் மீது இன்று உத்தரப் பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நாட்டின் ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பதிவுகளை வெளியிட்ட 60 யூட்யூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
- ஆகஸ்ட் மாதம் சந்திராயன் 3 விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
உலகம்:
- விரைவில் சர்வதேச அங்கீகாரம் பெறுவோம் என ஆப்கானிஸ்தான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர்கான் முட்டக்கி தெரிவித்துள்ளார்.
- கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் ஹாக்கி விளையாடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- நைஜீரியாவில் எண்ணெய் கப்பல் வெடித்து சிதறி விபத்து நிகழ்ந்தது. இதில், பல ஊழியர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விளையாட்டு:
- அண்டர் 19 உலகப்கோப்பை தொடரில் தொடர்ந்து நான்காவது முறையாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது
- வெஸ்ட் இண்டீஸுடனான தொடரில் பங்கேற்க இருந்த இந்திய வீரர்கள் 4 பேர் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- ரஞ்சி டிராபியில் விளையாடுங்கள் என இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் புஜாரா, ரஹானேவுக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவுரை கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: திமுக வட்டச் செயலாளர் கொலையில் கூலிப்படையைச் சேர்ந்த 5 பேர் கைது: குற்றவாளியை நெருங்கும் தனிப்படை!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion