ABP Nadu Exclusive: 'தமிழை விரும்புபவர்கள் அறிவியலை நேசிப்பார்கள்' - சி.எஸ்.ஐ.ஆர்., தலைமை இயக்குநர் பேட்டி
”முயற்சி செய்யாமல் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடியாது. அதனால் அதனை நாமே எடுத்துக்கொள்ள வேண்டும். பிறர் நம்மை முயற்சிக்க வைக்கும் போது சுமையாக தோன்றும் என்றார்.” - சி.எஸ்.ஐ.ஆர் தலைமை இயக்குநர்.
சிவகங்கை மாவட்டம் மத்திய மின் வேதியியல் ஆய்வக இயக்குநராக பதவி வகித்தவர் ந.கலைச்செல்வி. இவர் தற்போது டில்லி C.S.I.R அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநராகவும், செயலாளாராகவும் பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இயங்கிவரும் 37 ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைமையிடம் புது டில்லியில் உள்ளது. இந்த அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழுமத்தில் 80 ஆண்டு கால சி.எஸ்.ஐ.ஆர்.,நிறுவனத்தின் முதல் பெண் பொது இயக்குநர் மற்றும் செயலாளரும் இவர் தான். மேலும் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பொது இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காரைக்குடி சிக்ரிக்கு வந்த அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது "Abp நாடு' க்கு தனியாக பேட்டி அளித்தார்.
'இந்தியாவில் அறிவியல் துறையும் தொழில்துறையும் ஏறுமுகத்தில் தான் உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் இருவருக்குமான கூட்டமைப்பை வலுப்படுத்தப்பட வேண்டும்." டில்லி சி.எஸ்.ஐ.ஆர், நிறுவன பொது இயக்குனர் கலைச்செல்வி தெரிவித் தார்.#CSIR | #karaikudi | #tamailnadu pic.twitter.com/PANQQxnwVL
— Arunchinna (@iamarunchinna) August 11, 2022
தமிழை விரும்பும் நபர்கள் அறிவியலை விரும்புவார்கள் !
— Arunchinna (@iamarunchinna) August 10, 2022
- சி.எஸ்.ஐ.ஆர் இயக்குநர் கலைச்செல்வி ABP Nadu-க்கு பேட்டி https://t.co/0mn3qTrLfh@abpnadu | @SRajaJourno | @thangadurai887 | #csir | #karaikudu | #TamilNadu
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்