மேலும் அறிய
திருப்பரங்குன்றம் தீபம்: நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்தாதது ஏன்? அடுத்த கட்டம் என்ன?
அரசு தரப்பில் ஏன் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

திருப்பரங்குன்றம் தீபம்
Source : whatsapp
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை தமிழ்நாடு அரசு நேற்று செயல்படுத்தாத நிலையில், அது குறித்த வழக்கு வருகின்ற செவ்வாய்க்கிழமைக்கு (டிசம்பர் 9) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு.
மதுரை திருப்பரங்குன்றம் தீபம்
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில் உத்தரவுபடி தீபத்தூணில் தீபம் நேற்றைய முன்தினம் ஏற்றவில்லை இதனை கண்டித்து பாஜகவினர் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மீண்டும் நேற்று மாலை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் நீதிமன்ற அவமதிப்பு மனு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் CISF பாதுகாப்புடன் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டிருந்தார். இதனிடையே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மனுதாரர் மற்றும் CISF படையினருக்கு மலை மேல் செல்ல அனுமதி இல்லை என காவல்துறையினர் கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.
நேற்று இரவும் பரபரப்பான திருப்பரங்குன்றம்
இதையடுத்து நேற்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யக்கூடிய தமிழக அரசின் மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது. இதனையடுத்து நடைபெற்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது நீதிபதி G.R சுவாமிநாதன் காவல் ஆணையர் லோகநாதன் காணொளி மூலமாக ஆஜராக உத்தரவிட்டார். பின்னர் காணொளி மூலமாக காவல் ஆணையர் ஆஜராகினார். இதையடுத்து 144 தடை உத்தரவை ரத்து செய்தும், மனுதாரர்கள் தீப தூணுக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும் எனவும், அதற்கு மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் தலைமையில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர் தீர்ப்பு நகலுடன் திருப்பரங்குன்றம் தீபத்தூண் பகுதிக்கு செல்லும் மலை அடிவாரத்திற்கு மனுதாரர் மற்றும் வழக்கறிஞர்களுடன் வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை துணை ஆணையர் இனிக்கோ திவ்யன் 144 தடை உத்தரவு மற்றும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அதனால் தற்போது அனுமதிக்க முடியாது எனவும் கூறினார். இதனால் நேற்றும் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் நேற்று இரவும் திருப்பரங்குன்றம் பரபரப்பானது.

விசாரணையில் ஆஜராகவில்லை
இந்நிலையில் இந்த விவகாரத்தின் நிலை குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று காலை அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. அந்த அடிப்படையில் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனி நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணை துவங்கியது. மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மதுரை மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் ஆகியோர் இன்றைய விசாரணையில் ஆஜராகவில்லை.
அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும்
இந்நிலையில், மனுதாரர் தரப்பில் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை என நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. அரசு தரப்பில் ஏன் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாரை ஏன் அனுமதிக்க வில்லை என்பது குறித்து சிஐஎஸ்எப் கமாண்டன்ட் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் செலவு எனவும் நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் இந்த வழக்கு விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கு கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
கடுமையான சோதனை
இதனை அடுத்து வழக்கை வருகின்ற டிசம்பர் 9ஆம் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நீதிமன்ற வளாகத்திற்குள் வருகின்ற அனைவரும் கடுமையான சோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement