இதுதான் அமித்ஷாவின் உண்மை முகம்! கிழித்தெடுக்கும் திருமாவளவன்!
அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம்.
அம்பேத்கரை பற்றி நாடே பேசுவதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும் என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில், “புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்? எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம்.
அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் உண்மையான எதிரிகள். இதனையே விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். சங்பரிவார்கள் புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள்.
புரட்சியாளர் அம்பேத்கர் "விசுவரூபம் " எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும்!” எனத் தெரிவித்துள்ளார்.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்?
— Thol. Thirumavalavan (@thirumaofficial) December 18, 2024
எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை #அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை… pic.twitter.com/IkMrpjQVSc
முன்னதாக, மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இப்போது அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என பேசுவது பேஷனாகிவிட்டது. இப்படி சொல்வதற்கு பதில் கடவுளின் நாமத்தை உச்சரித்திருந்தால் அவர்களுக்கு சொர்க்கமாவது கிடைத்திருக்கும். ஆனாலும் அம்பேத்கர் பெயரை காங்கிரஸ் உச்சரிப்பது பாஜகவுக்கு மகிழ்ச்சி. காங்கிரஸ் உண்மையான உணர்வுடன் செயல்பட வேண்டும்” எனப் பேசியிருந்தார்.
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் போராட்டங்களும் நடைபெற்றன. நாடாளுமன்றம் முடங்கியது. மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் எம்பிக்கள் கோஷமிட்டனர்.
இதுகுறிட்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “டாக்டர். அம்பேத்கரின் பாரம்பரியத்தை அழிக்கவும், SC/ST சமூகங்களை அவமானப்படுத்தவும், ஒரு வம்சத்தின் தலைமையில் ஒரு கட்சி எப்படி எல்லாவிதமான கேடுகெட்ட தந்திரங்களிலும் ஈடுபட்டது என்பதை இந்திய மக்கள் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

