ISRO Second Launchpad: இஸ்ரோவின் இரண்டாம் ஏவுதளம்.. குலசேகரப்பட்டினத்தில் நில விவரத்தை வெளியிட்ட மத்திய அரசு..
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாம் ஏவுதளம் அமைய உள்ள நிலையில் அதற்கான இடம் தேர்வு விவரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் விவரித்து உள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்படுகிறது. அதேபோல் அங்கிருந்து இந்தியாவுக்கான செயற்கைகோள்கள் மட்டுமல்லாமல் வணிக ரீதியாக பிற நாட்டுச் செயற்கக்கோள்களும் விண்ணில் செலுத்தப்படுகிறது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அதாவது சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இரண்டு ஏவுதளங்கள் உள்ளன.
சமீபத்தில் இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி உலக நாடுகளை உற்று நோக்கச் செய்தது. நிலவின் தென் துருவத்தில் பல்வேறு கனிமங்கள் இருப்பதை கண்டறிந்தது. அதேபோல் கடந்த மாதம் சூரியனை ஆய்வு செய்யும் வகையில் ஆதித்யா எல்1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. தற்போது லெக்ராஞ்சு புள்ளியை நோக்கி பயணம் செய்து வருகிறது.
இந்நிலையில் இஸ்ரோ தமிழ்நாட்டில் இரண்டாவது தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தப்படியாக தூதுக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ஏவுதளம் அமைக்க திட்டமிட்டுள்ளது. பல்வேறு ஆய்வு பணிகளுக்கு பின் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 2,300 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏவுதளம் அமையவுள்ள நிலையில், இதற்குத் தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளில் 99% முடிந்துவிட்டதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கையகப்படுத்த நிலமும் இப்போது இஸ்ரோ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டவில் இருந்து பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்ற ராக்கெட்டுகள் ஏவப்படும் நிலையில் குலசேகரப்பட்டினத்தில் அமைய இருக்கும் ஏவுதளத்தில் முதலில் சிறிய வகை ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் ஏவுதளத்திற்கான பணிகள் நிறைவடைய இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எத்தனையோ இடங்கள் இருந்தும் ஏன் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அதாவது குலசேகரப்பட்டினத்திற்கு அண்டார்டிக்காவிற்கும் இடையே எந்த ஒரு நிலைமும் கிடையாது. மேலும் பூமத்திய ரேகைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் இடம் என்பதால் நமக்கு எரிபொருள் செலவு குறையும். இதன் காரணமாகவே குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இப்படி குலசேகரப்பட்டினத்தில் விண்வெஇ ஏவுதளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு இடம் தேர்வு விவரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் விவரித்து உள்ளது. குறிப்பிட்ட அந்த பகுதியை மக்கள் பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி படுக்கபத்து மற்றும் சாத்தான்குளம் தாலுகாவில் பள்ளக்குறிச்சி, திருச்செந்தூர் தாலுகாவில் மாதவன்குறிச்சியை உள்ளடக்கிய பகுதி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் வடக்கு எல்லையாக தாண்டவன்காடு, நாராயணபுரம் மற்றும் மாதவன்குறிச்சி கிராமங்களும், தெற்கே மன்னார் வளைகுடா, கிழக்கே மன்னார் வளைகுடா மற்றும் அமரபுரம், மணப்பாடு கிராமங்களும், மேற்கே படுக்கபத்து மற்றும் எள்ளுவிளை கிராமங்களும் இடம்பெற்றுள்ளதாக மத்திய அரசின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
Ayalaan Teaser: பொங்கலுக்கு வருகிறான் அயலான்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர் ரிலீஸ் - சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி!
Crime: "இன்னும் 39 முறை சுட்டுருவேன்" - ஆசிரியரை காலில் சுட்ட மாணவர்கள் மிரட்டல்... உ.பியில் ஷாக்!
சிறையில் இருந்து கொண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள் யார்? யார்?