Thangar Bachan: பிழைக்க வருபவர்கள் தமிழை கற்றுக்கொள்வதே இதற்காகத்தான்! - தங்கர்பச்சான் ஆவேசம்
தமிழர்களைச் சுரண்ட முதலில் கையில் எடுக்கும் கருவி, தமிழைக் கற்றுக்கொள்வதுதான் என இயக்குநர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.
![Thangar Bachan: பிழைக்க வருபவர்கள் தமிழை கற்றுக்கொள்வதே இதற்காகத்தான்! - தங்கர்பச்சான் ஆவேசம் Thangar Bachan Tweets About North Indians All those who have learned Tamil in Tamil Nadu can become Tamils Thangar Bachan: பிழைக்க வருபவர்கள் தமிழை கற்றுக்கொள்வதே இதற்காகத்தான்! - தங்கர்பச்சான் ஆவேசம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/26/1eb3d87944d63f7206feddb60415bb1a1674753109243571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருப்பூரில் தமிழ்நாட்டினர் சிலரை, வட மாநிலத்தவர்கள் கும்பலாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தங்கர்பச்சான் ட்வீட்
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இங்கே பிழைக்க வருபவர்கள் தமிழர்களைச்சுரண்ட முதலில் கையில் எடுக்கும் கருவி தமிழைக் கற்றுக்கொள்வது தான்! உலகத்தில் எந்த நாட்டிலும் அந்நாட்டு மொழியை கற்றுக்கொண்டதற்காக அந்த இனத்தவர்களாக ஆகி விட முடியாது! ஆனால் தமிழ் நாட்டில் தமிழை கற்றுக் கொண்டவர்கள் எல்லாம் தமிழர்கள் ஆகிவிடலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
இங்கே பிழைக்க வருபவர்கள் தமிழர்களைச்சுரண்ட முதலில் கையில் எடுக்கும் கருவி தமிழைக் கற்றுக்கொள்வது தான்! உலகத்தில் எந்த நாட்டிலும் அந்நாட்டு மொழியை கற்றுக்கொண்டதற்காக அந்த இனத்தவர்களாக ஆகி விட முடியாது! ஆனால் தமிழ் நாட்டில் தமிழை கற்றுக் கொண்டவர்கள் எல்லாம் தமிழர்கள் ஆகிவிடலாம்!
— தங்கர் பச்சான் |Thankar Bachan (@thankarbachan) January 26, 2023
என்ன நடந்தது?
திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், திருமுருகன்பூண்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பின்னலாடை நிறுவனங்களில் ஒரிசா, ஜார்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பணி செய்து வருகின்றனர். இங்குள்ள பின்னலாடை நிறுவனங்களில் திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை கடந்து அதன் அண்டை மாவட்டங்களான ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் பணி புரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அனுப்பர்பாளையம் - வேலம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்க்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமிழ்நாட்டு தொழிலாளர்களை பெல்ட், கட்டை, உள்ளிட்டவைகளை கொண்டு துரத்தி துரத்தி தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை விசாரணை:
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலம்பாளையம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விசாரணையில், பின்னலாடை நிறுவனத்திற்கு அருகே உள்ள பெட்டிக்கடையில், சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்னையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் வடமாநில தொழிலாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வட மாநில தொழிலாளர்கள் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. வட மாநில தொழிலாளர்கள் பெல்ட், உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களுடன் தமிழ்நாட்டு தொழிலாளர்களை தாக்கியுள்ளனர். தொடர்ந்து இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டதில், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இயக்குநர் தங்கர்பச்சானின் பதிவானது, இந்த சம்பவத்தை குறித்தே பதிவிட்டுள்ளார் என்றும் பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)