TN Headlines: தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்; 10 மாதமாகியும் வெளியாகாத குரூப் 2 தேர்வு முடிவுகள்.. முக்கிய செய்திகள்
தமிழ்நாட்டில் காலை முதல் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- TNPSC Issue: ஆமை வேகம்; சைலேந்திர பாபுவுக்காகக் காத்திருக்கிறதா டிஎன்பிஎஸ்சி? என்னதான் பிரச்சினை?
தமிழ்நாட்டுக்கான அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை, முதன்முதலாக 1930ஆம் ஆண்டில் சர் நார்மன் மஜோரி என்ற ஆங்கிலேயர் வழிநடத்தத் தொடங்கினார். சுதந்திரத்துக்குப் பிறகு திவான் பகதூர் பிள்ளை என்ற தமிழ்நாட்டுக்காரர், 1948-ல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆணையம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகளை விரைவில் எட்டவுள்ள சூழ்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைவர் இல்லாமல் தவித்து வருகிறது டிஎன்பிஎஸ்சி. மேலும் படிக்க
- Rain Alert :மக்களே உஷார்! டிசம்பர் 16, 17 தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்விடங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில், மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 15.12.2023: தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க
- TNPSC Group 2 Result: தேர்வர்கள் வாழ்க்கையுடன் விளையாடாதீர்கள்: 10 மாதமாகியும் வெளியாகாத குரூப் 2 தேர்வு முடிவுகள்- அன்புமணி கண்டனம்
10 மாதங்களாகியும் தொகுதி 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், மாணவர்கள் வாழ்க்கையுடன்டி.என்.பி.எஸ்.சியும், அரசும் விளையாடக்கூடாது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்: ’தமிழக அரசுத் துறைகளில் குரூப் 2, 2 ஏ பணிகளில் சேர்ந்து விடலாம் என்று ஆவலுடன் காத்திருந்த போட்டித்தேர்வர்களை தமிழக அரசும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கின்றன. மேலும் படிக்க
- CM Stalin: 'கோவைக்கு வருகிறேன்.. இதை மட்டும் பண்ணுங்க' .. மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்..!
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் பயன் மக்களைச் சென்றடைய உதவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைத்தள பதிவு மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. மேலும் படிக்க
- Chennai Fog: கொடைக்கானலாக மாறிய சென்னை! காரணம் என்ன? - வானிலை ஆய்வாளர் விளக்கம்
வானிலை எப்போதுமே ஒரே மாதிரி இருப்பதில்லை. விழி மூடி திறக்கும் நொடியில் பல மாற்றங்கள் ஏற்படும். டிசம்பர் மாதம் தொடங்கியது முதலே வெயில், மழை, புயல், பனிமூட்டம் என மாறி மாறி வானிலை நிலவரம் இருந்து வருகிறது. டிசம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால் பல பகுதிகள் நீருக்குள் மூழ்கியது. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். மேலும் படிக்க