CM Stalin: 'கோவைக்கு வருகிறேன்.. இதை மட்டும் பண்ணுங்க' .. மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்..!
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் பயன் மக்களைச் சென்றடைய உதவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைத்தள பதிவு மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் பயன் மக்களைச் சென்றடைய உதவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைத்தள பதிவு மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. கோவையில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.
இதில் அனைத்து அரசுத்துறை சார்பிலும் அனைத்து மாவட்டங்களிலும் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “உங்களில் ஒருவனான என்னை, உங்களுக்கான ஒருவனாக உருவாக்கி முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வைத்தீர்கள். நமக்கு வாக்களிக்காத மாற்றுச் சிந்தனை கொண்டோரும் 'தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே!' என்று என்று எண்ணும் வகையிலான மக்கள் நலன் பேணும் ஆட்சியைக் கட்டமைத்து வருகிறோம்.
- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
- விடியல் பயணம்
- முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
- புதுமைப்பெண் திட்டம்
- இல்லம் தேடிக் கல்வி
- இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48
- நான் முதல்வன்
போன்ற நமது #DravidianModel அரசின் திட்டங்கள் அனைத்தும் உங்களை வந்து சேர்வதை உறுதிசெய்திட ‘கள ஆய்வில் முதலமைச்சர்' என உங்கள் மாவட்டங்களுக்கு வந்தேன். இதனை இன்னும் செம்மைப்படுத்திட வேண்டுமல்லவா! உங்களின் தேவைகளும் அரசின் சேவைகளும் ஒரு குடையின்கீழ் சந்தித்து விரைவில் தீர்வுகள் கிடைத்தால் அது #DravidianModel-இன் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரம் என மின்னிடுமே! அப்படியான திட்டமாக உருப்பெறுகிறது #மக்களுடன்முதல்வர் திட்டம்!
உங்களில் ஒருவனான என்னை, உங்களுக்கான ஒருவனாக உருவாக்கி முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வைத்தீர்கள்.
— M.K.Stalin (@mkstalin) December 15, 2023
நமக்கு வாக்களிக்காத மாற்றுச் சிந்தனை கொண்டோரும் 'தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே!' என்று என்று எண்ணும் வகையிலான மக்கள் நலன் பேணும் ஆட்சியைக் கட்டமைத்து வருகிறோம்.
👸கலைஞர்… pic.twitter.com/tsLj09pns5
இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கத் திங்களன்று கோவைக்கு வருகிறேன்... மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு இந்தத் திட்டத்தின் பயன் மக்களைச் சென்றடைய உதவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.