மேலும் அறிய

TNPSC Group 2 Result: தேர்வர்கள் வாழ்க்கையுடன் விளையாடாதீர்கள்: 10 மாதமாகியும் வெளியாகாத குரூப் 2 தேர்வு முடிவுகள்- அன்புமணி கண்டனம்

TNPSC Group 2 Mains Result 2023:

10 மாதங்களாகியும் தொகுதி 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத நிலையில்,  மாணவர்கள் வாழ்க்கையுடன்டி.என்.பி.எஸ்.சியும், அரசும் விளையாடக்கூடாது என்று  பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:

’’தமிழக அரசுத் துறைகளில் குரூப் 2, 2 ஏ பணிகளில் சேர்ந்து விடலாம் என்று ஆவலுடன் காத்திருந்த போட்டித்தேர்வர்களை தமிழக அரசும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கின்றன. குரூப் 2, 2 ஏ தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி 80% நிறைவடைந்து விட்டது, மீதமுள்ள பணிகளும் முடிக்கப்பட்டு டிசம்பர் முதல் வாரத்தில் 6000 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகளால் பணி நியமன ஆணைகள்  வழங்கப்படும் என்று மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், டிசம்பர் இரண்டாவது வாரம் நிறைவடைந்தும்  எதுவும் நடக்கவில்லை. போட்டித்தேர்வு எழுதியவர்களின் மன உளைச்சல் அதிகரித்ததுதான் மிச்சம்.

ஆமையிடமும் வீழும் வேகத்தில் டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப்2 பணியிடங்கள் 121, குரூப் 2ஏ பணியிடங்கள் 5097 ஆகியவற்றை நிரப்புவதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ஆம் நாள் வெளியிடப்பட்டது. அப்பணிகளுக்கான முதனிலைத் தேர்வு முடிவுகள் முடிந்து கடந்த பிப்ரவரி 25-ஆம் நாள் நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதமே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நவம்பர் மாதம் வரை வெளியிடப்படாததை கடந்த நவம்பர் 6-ஆம் தேதி அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால், தாமதமே இல்லை; டிசம்பரில் முடிவு வெளியிடப்படும் என்று அமைச்சர் அளித்த வாக்குறுதி காற்றுடன் கலந்து விட்டது. ஆமையிடமும் வீழும் வேகத்தில்தான் டி.என்.பி.எஸ்.சி செயல்படுகிறது.

போட்டித் தேர்வர்களிடம் மன்னிப்பு கேளுங்கள்!

குரூப் 2, 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வை எழுதியவர்கள் வெறும் 52,000 பேர் மட்டும்தான். முதன்மைத் தேர்வில் ஒவ்வொரு போட்டியாளரும் 2 தாள்களை எழுத வேண்டும்; அதன்படி மொத்தம் 1.04 லட்சம் விடைத்தாள்களை திருத்த வேண்டும். அவை அனைத்தும் இரண்டே வகைப்பட்டவைதான். அவற்றை மிக எளிதாக திருத்தி விட முடியும். ஆனால் அதைக்கூட 10 மாதங்களாக  திருத்தி, முடிவுகளை வெளியிட முடியாத நிலையில்தான்  டி.என்.பி.எஸ். சி இருக்கிறது என்றால், அதற்கு பொறுப்பானவர்களும், ஆட்சியாளர்களும் போட்டித் தேர்வர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

குரூப் 2, 2ஏ பணிகளுக்கான போட்டித்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டு இரு ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. ஒரு தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதில் தொடங்கி, முடிவுகளை அறிவதற்காக இரு ஆண்டுகள் காத்திருப்பது போட்டித் தேர்வர்களின் மனநிலையை கடுமையாக பாதிக்கும். ஆனால், இதுகுறித்த அக்கறை எதுவும் அரசுக்கு இல்லை. அதனால்தான்  அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவியை ஒன்றரை ஆண்டுகளாக காலியாக வைத்துக் கொண்டு, வெறும் நான்கு உறுப்பினர்களுடன்  ஆணையத்தை அரசு நடத்தி வருகிறது.

டிஎன்பிஎஸ்சியே தேவையில்லை

2023-ஆம் ஆண்டு நிறைவடையவிருக்கும் நிலையில், இதுவரை 19 ஆள்தேர்வு அறிவிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை வெறும் 4217 மட்டுமே. தேர்வாணைய வரலாற்றில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது இந்த ஆண்டாகத்தான் இருக்கக்கூடும். இவ்வளவு மந்தமாக செயல்படுவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்ற அமைப்பே தேவையில்லை.

தேர்வர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய தலைவரையும், 10 உறுப்பினர்களையும் உடனடியாக நியமிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Thank ADMK: அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
Savukku Shankar: சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து சரமாரி தாக்குதல்.. தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள் யார்.?
சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து சரமாரி தாக்குதல்.. தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள் யார்.?
DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?
DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?
Tuberculosis: காசநோய் எனும் எமன்..! ஆண்டுக்கு 3.2 லட்சம் பேர் மரணம், அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
Tuberculosis: காசநோய் எனும் எமன்..! ஆண்டுக்கு 3.2 லட்சம் பேர் மரணம், அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்Eknath Shinde | ”ஏக்நாத் ஷிண்டே துரோகியா?”காமெடியனை மிரட்டும் சிவசேனா சூறையாடப்பட்ட STUDIO...!Vignesh Puthur Profile | CSK-வை கதறவிட்ட விக்னேஷ் புதூர் யார்? AUTO DRIVER மகன் To IPL நாயகன்! | MI | Chennai Super Kings | IPL 2025 | Dhoni

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Thank ADMK: அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
Savukku Shankar: சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து சரமாரி தாக்குதல்.. தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள் யார்.?
சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து சரமாரி தாக்குதல்.. தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள் யார்.?
DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?
DMK - PMK Alliance : “திமுக கூட்டணியில் பாமக ? - வெளியேறுகிறாரா வேல்முருகன்? முதல்வர் முடிவு என்ன..?
Tuberculosis: காசநோய் எனும் எமன்..! ஆண்டுக்கு 3.2 லட்சம் பேர் மரணம், அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
Tuberculosis: காசநோய் எனும் எமன்..! ஆண்டுக்கு 3.2 லட்சம் பேர் மரணம், அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?
Pawan Kalyan's Politics: இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
Gold Rate Decreased: தங்கம் வாங்குறவங்க டக்குனு போங்க.. 4-வது நாளாக குறைந்த விலை.. இன்றைய நிலவரம்...
தங்கம் வாங்குறவங்க டக்குனு போங்க.. 4-வது நாளாக குறைந்த விலை.. இன்றைய நிலவரம்...
Madurai Gun Shot: அதிரடி காட்டும் காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Madurai Gun Shot: அதிரடி காட்டும் காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
Embed widget