TN Headlines: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; 10 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம் - முக்கிய செய்திகள்
TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
![TN Headlines: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; 10 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம் - முக்கிய செய்திகள் Tamilnadu latest headlines today october 25th afternoon politics tn rain alert news highlights TN Headlines: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; 10 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம் - முக்கிய செய்திகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/25/0b2d193b4a572eee0cfdd2d40956f3f71698224380348572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
- DA: அதிரடி அறிவிப்பு: ஆசிரியர்கள் உள்ளிட்ட தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு!
ஆசிரியர்கள் உள்ளிட்ட தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப் படி, ஜூலை 1ஆம் தேதியில் இருந்து 4% உயர்த்தி 46 சதவீதமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க
- AIADMK Alliance Talks : திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஸ்கெட்ச்? மறைமுகமாக பேச்சுவார்த்தையை தொடங்கிய அதிமுக?
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்ட நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளை தங்களுடன் தக்க வைக்கும் முயற்சியை அதிமுக எடுத்து வருகிறது. இதில், புரட்சி பாரதம் கட்சி அதிமுக கூட்டணியை ஆதரித்து அதில் இணையும் என்ற நிலையில், மற்ற கட்சிகளின் நிலை மதில் மேல் பூனைபோல் உள்ளது. குறிப்பாக, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தாங்கள் தேசிய அளவில் பாஜவுடன் கூட்டணியில் இருப்பதாகவும் மாநிலத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்றும் சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். மேலும் படிக்க
- ‘எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளரா?’ - அண்ணாமலையின் ரியாக்சன் என்ன?
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “டி.ஆர். பாலு ஆளுநரை ஏக வசனத்தில் ஒருமையில் திட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முக்கியமான தலைவர்கள் குறுகிய வட்டத்திற்குள் அடைத்து விட்டனர். தென் தமிழகத்தில் குருபூஜைகளுக்கு செல்வது வார் ஜோனுக்குள் செல்வது போல, இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்குள் செல்வது போல உள்ளது. ஆளுநரின் கருத்து எந்த வகையிலும் தவறு கிடையாது. மேலும் படிக்க
- TRB Exam: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்: 2,222 பணியிடங்கள்; ஜன. 7ல் தேர்வு - டிஆர்பி அசத்தல் அறிவிப்பு
பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டு 2,222 பேர் நேரடி நியமனம் செய்யப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வட்டார வள மைய கருத்தாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. ஜனவரி மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ள தேர்வுக்கு நவம்பர் 1 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
- Minister M. Subramanian: அடுத்த 2 மாதங்களில் 10 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்.. டெங்கு காய்ச்சல் தடுக்கும் முயற்சியில் தீவிரம்..
வடகிழக்கு பருவமழையில் ஏற்படும் சுகாதார பாதிப்புகளை தவிர்க்க மழைக்கால மருத்துவ முகாம்கள் 10 வாரங்களில் பத்தாயிரம் இடங்களில் நடந்தபட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை பெசன்ட் நகரில் ஹெல்த்வாக் நடைபாதை அடுத்த மாதம் நவம்பர் 4 ஆம் தேதி அன்று பொது மக்களுக்கு பயன்பாட்டுக்கு வரும் நிலையில் அதற்கான ஆய்வு பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளராக ககன்தீப் சிங் பேடி , சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)