மேலும் அறிய

DA: அதிரடி அறிவிப்பு: ஆசிரியர்கள் உள்ளிட்ட தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு! 

ஆசிரியர்கள் உள்ளிட்ட தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப் படி, ஜூலை 1ஆம் தேதியில் இருந்து 4% உயர்த்தி 46 சதவீதமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் உள்ளிட்ட தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப் படி, ஜூலை 1ஆம் தேதியில் இருந்து 4% உயர்த்தி 46 சதவீதமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும்‌ 42 சதவீத அகவிலைப்படி, 01.07.2023 முதல்‌ 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்‌ என தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ ‌ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றம்

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘’மக்கள்‌ நலனுக்காக அரசு வகுக்கும்‌ பல்வேறு திட்டங்களைச்‌ செயல்படுத்தும்‌ அரும்பணியில்‌, அரசோடு இணைந்து பணியாற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌ நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. முந்தைய அரசு விட்டுச்‌ சென்ற கடும்‌ நிதி நெருக்கடி மற்றும்‌ கடன்‌ சுமைக்கு இடையேயும்‌, அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களின்‌ பல்வேறு கோரிக்கைகள்‌ குறித்த வாக்குறுதிகளைப்‌ படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன்‌ இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.

அவ்வகையில்‌, அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ தொடர்ந்து வலியுறுத்தி வரும்‌ கோரிக்கையை முதலமைச்சர்‌ கனிவுடன்‌ பரிசீலித்து, ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்‌ போதெல்லாம்‌ உடனுக்குடன்‌ தமிழ்நாடு அரசும்‌ அதை பின்பற்றும். அவ்வாறு பின்பற்றி அரசு அலுவலர்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கும்‌ அகவிலைப்படி உயர்வு செயல்படுத்தப்படும்‌ என்று ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பைத்‌ தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப் படியை 04.07.2023 முதல்‌ 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ உத்தரவிட்டுள்ளார்‌. 

ஆண்டுக்கு 2546 கோடி ரூபாய்‌ கூடுதல்‌ செலவு

இந்த அகவிலைப்படி உயர்வால்‌, சுமார்‌ 16 இலட்சம்‌ அரசு அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌, ஓய்வூதியதாரர்கள்‌ மற்றும்‌ குடும்ப ஓய்வூதியதாரர்கள்‌ பயன் பெறுவார்கள்‌. இதனால்‌ ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2546.16 கோடி ரூபாய்‌ கூடுதல்‌ செலவினம்‌ ஏற்படும்‌. எனினும்‌, அரசு அலுவலர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியதாரர்கள்‌ நலன்‌ கருதி இதற்கான கூடுதல்‌ நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்‌’’ என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு, தன் ஊழியர்களுக்கான அகவிலைப் படியை ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை உயர்த்தி வருகிறது. மத்திய அரசைத் தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப் படியை உயர்த்தி, அறிவிப்பது வழக்கம். இந்த நிலையில் தமிழக அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப் படியை உயர்த்தி அறிவிக்காமல் இருந்தது.

இதுகுறித்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் அதிருப்தி தெரிவித்த நிலையில், ‌42 சதவீத அகவிலைப்படி, 01.07.2023 முதல்‌ 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்‌ என தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ ‌ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
7 Seater: அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Embed widget