மேலும் அறிய

TRB Exam: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்: 2,222 பணியிடங்கள்; ஜன. 7ல் தேர்வு - டிஆர்பி அசத்தல் அறிவிப்பு

பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டு 2,222 பேர் நேரடி நியமனம் செய்யப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டு 2,222 பேர் நேரடி நியமனம் செய்யப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வட்டார வள மைய கருத்தாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. 

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய கருத்தாளர் (GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS - BRTE) ஆகிய பணிகளுக்கு 2,222 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்காக ஜனவரி மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கு நவம்பர் 1 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலமாக மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும். 

என்ன தகுதி?

இத்தேர்வை எழுத ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு மற்றும் பி.எட். படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில்( Tamil Nadu Teacher Eligibility Test Certificate- TNTET Paper – II) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

பணியிடங்கள்

தமிழ் பாடம் -  371 பணியிடங்கள், 
ஆங்கிலப் பாடம் - 214 பணியிடங்கள், 
கணிதப் பாடம் - 200 பணியிடங்கள், 
இயற்பியல் பாடம் - 274 பணியிடங்கள், 
வேதியியல் பாடம் - 273 பணியிடங்கள், 
வரலாறு பாடம் - 346 பணியிடங்கள் உள்ளிட்ட 2,222 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஊதியம் எவ்வளவு?
36,400 ரூபாய் முதல் 11,5700 ரூபாய் வரை. 

எந்தெந்தப் பள்ளிகளில் என்னென்ன காலி இடங்கள்?

* பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம்- 2171
* மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரகம்- 23
* ஆதிதிராவிடர் நலத்துறை - 16
* மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - 12

வயது வரம்பு

பொதுப் பிரிவு தேர்வர்களுக்கு அதிகபட்சம் 53 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை

1. கட்டாய தமிழ் மொழித் தேர்வு

தேர்வர்கள் கட்டாய தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். 

2. பாடங்களுக்கான எழுத்துத் தேர்வு

150 கேள்விகளுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.

3. சான்றிதழ் சரிபார்ப்பு

முழுமையான விவரங்களைப் பெற: https://www.trb.tn.gov.in/admin/pdf/2603611744BT%20FINAL_25.10.2023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

கூடுதல் விவரங்களுக்கு: https://www.trb.tn.gov.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
"தெலுங்கு மக்களே! மன்னிச்சுடுங்க" சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி!
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFESivagangai News |  தம்பி மனைவியின் உதட்டைகடித்து கொதறிய அண்ணன்!சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
"தெலுங்கு மக்களே! மன்னிச்சுடுங்க" சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி!
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
CJI Chandrachud: தலைமை நீதிபதி வீட்டிற்கு பிரதமர் சென்ற விவகாரம்: சட்ட ரீதியான பாயிண்ட்டை போட்டு ஆஃப் செய்த சந்திரசூட்
தலைமை நீதிபதி வீட்டிற்கு பிரதமர் சென்ற விவகாரம்: சட்ட ரீதியான பாயிண்ட்டை போட்டு ஆஃப் செய்த சந்திரசூட்
"மு.க.ஸ்டாலின் கடின உழைப்பாளி" புகழ்ந்து தள்ளிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
Ration Shop: வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் -  காரணம் என்ன..?
வரும் 7ம் தேதி ரேஷன் கடைகளை பூட்டி வேலை நிறுத்தம் - காரணம் என்ன..?
WhatsApp: செம அப்டேட்! Whatsapp-இல் வரப்போகும் புதிய Chat ஃபில்டர் வசதி - எப்படி?
WhatsApp: செம அப்டேட்! Whatsapp-இல் வரப்போகும் புதிய Chat ஃபில்டர் வசதி - எப்படி?
Embed widget