TN Headlines: கொடைக்கானல் செல்ல இன்று முதல் இ- பாஸ்! சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் புகார்- இதுவரை இன்று நடந்தது?
TN Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்பச் செய்திகளாக கீழே காணலாம்.
MK Stalin: “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்” - திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவு!
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமோக வெற்றி பெற்று 10 வருடங்களுக்குப் பின் ஆட்சியில் அமர்ந்தது. மே 7 ஆம் தேதி முதலமைச்சராக முதல் முறையாக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இன்றோடு திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த காலக்கட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மேலும் படிக்க..
TN Weather: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை குறையும் - மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் நாளை முதல் (08.05.2024) 11-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், வரும் வாரத்தில் வெப்பம் தணியும். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையின் விவரம். மேலும் படிக்க..
சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் புகார் - வழக்குப்பதிவு செய்த சேலம் சைபர் கிரைம்
பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர் சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றிக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில் காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகளை பார்த்த சைபர் கிரைம் போலீசார்யூ டியூப் சவுக்கு சங்கர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவு படுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் படிக்க..
கரூர்: ராயனூர் ஸ்ரீ பால்வடித்த வேம்படியம்மன் சித்திரை திருவிழா - பக்தர்கள் நேர்த்திக்கடன்
கரூர் ராயனூர் அகதிகள் முகாம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பால்வடித்த வேம்படியம்மன் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு அமராவதி ஆற்றில் இருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம், அக்னி சட்டி, கரும்புத் தொட்டில், அழகு மற்றும் பறவை காவடி எடுத்து நேர்த்திக் கடன் செய்தனர்.மேலும் படிக்க..
kodaikanal: கொடைக்கானல் போறீங்களா..? - கட்டாயம் இதை தெரிஞ்சிகோங்க..!
பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர் சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றிக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில் காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகளை பார்த்த சைபர் கிரைம் போலீசார்யூ டியூப் சவுக்கு சங்கர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவு படுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேலும் படிக்க..