மேலும் அறிய

TN Weather: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை குறையும் - மிதமான மழைக்கு வாய்ப்பு!

TN Weather: தமிழ்நாட்டில் வரும் வாரங்களில் வெப்பநிலையிலை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாளை முதல் (08.05.2024) 11-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், வரும் வாரத்தில் வெப்பம் தணியும். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையின் விவரம்:

07.05.2024:

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

08.05.2024:

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை ) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர். தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

09.05.2024:

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

10.05.2024 மற்றும் 11.05.2024:

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

12.05.2024:

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

13.05.2024:

தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை ( 08.05.2024) மழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள் 

 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

07.05.2024 முதல் 11.05.2024 வரை:

அடுத்த 24 மணி நேரங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 08.05.2024 முதல் 11.05.2024 வரை; அடுத்த 4 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

07.05.2024 முதல் 11.05.2024 வரை:

அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 23 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 07.05.2024: தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3'-5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41'-43 செல்சியஸ். இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39-40 செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36-38 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்:

07.05.2024 முதல் 11.05.2024 வரை:

காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 40-55% ஆகவும், மற்ற நேரங்களில் 50-85% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 55-85%ஆகவும் இருக்கக்கூடும்


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget