கரூர்: ராயனூர் ஸ்ரீ பால்வடித்த வேம்படியம்மன் சித்திரை திருவிழா - பக்தர்கள் நேர்த்திக்கடன்
கரூர் ராயனூர் இலங்கை அகதிகள் முகாமில் ஸ்ரீ பால்வடித்த வேம்படியம்மன் சித்திரை மாத திருவிழா தொடங்கியது.
கரூர் ராயனூர் அகதிகள் முகாம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பால்வடித்த வேம்படியம்மன் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு அமராவதி ஆற்றில் இருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம், அக்னி சட்டி, கரும்புத் தொட்டில், அழகு மற்றும் பறவை காவடி எடுத்து நேர்த்திக் கடன் செய்தனர்.
சித்திரை மாதம் என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதனுடைய பகுதியாக கரூர் ராயனூர் இலங்கை அகதிகள் முகாமில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பால்வடித்த வேம்படியம்மன் சித்திரை மாத திருவிழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வாக அமராவதி ஆற்றில் இருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம், அக்னிச்சட்டி, அழகு குத்துதல் மற்றும் பரவ காவடி எடுத்து தங்களுடைய நேர்த்திக்கடனை செய்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு ராயனூர் அகதிகள் முகாம் பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சீருடை அணிந்தவாறு அமராவதி ஆற்றுக்கு வந்தனர்.
அதைத் தொடர்ந்து அமராவதி ஆற்றில் அருள்மிகு ஸ்ரீ பால்வடித்த வேம்படடியம்மன் கரகம் மற்றும் அக்னி சட்டி, பால்குடம், தீர்த்த குடம், அழகு குத்தி அதன் தொடர்ச்சியாக பரவ காவடி எடுத்து பக்தர்கள் பத்தி பரவசத்துடன் மேளதாளங்கள் முழங்க அமராவதி ஆற்றில் இருந்து சிறப்பு பூஜை நடைபெற்ற பிறகு முக்கிய வீதிகள் வழியாக ராயனூர் அகதிகள் முகாம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பால்வடித்த வேம்படியம்மன் ஆலயத்திற்கு வந்தடைந்தனர். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தர்கள் கையில் காப்பு கட்டி அதைத்தொடர்ந்து விரதம் இருந்து வாரு தங்களது நேர்த்திக்கடனை செய்தனர்.
தொடர்ச்சியாக பக்தர்கள் கொண்டு வந்த பால்குடம், தீர்த்த குடத்தால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரவு மாவிளக்கு மற்றும் பூச்செரிதல் விழா நடைபெற உள்ளது. கரூர் ராயனூர் அகதிகள் முகாமில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழாவில் பல்வேறு பக்தர்கள் நேற்றி கடன் செய்து வரும் நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குட நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து முதல் முறையாக பரவகாவடி வேண்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாகவும் ஊர் பொதுமக்கள் சார்பாகவும் சிறப்பாக செய்திருந்தனர். ராயனூர் அகதிகள் முகாமில் நடைபெற்ற அக்னி சட்டி, பால்குடம், தீர்த்த குடம்,அழகு குத்துதல், பரவகாவடி நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அப்பகுதி இளைஞர்கள் நீர்மோர் வழங்கி பக்தர்களை உற்சாகப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. கரூரில் சுற்றி இருக்கும் வெயிலால் பல்வேறு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வரும் நிலையில் பக்தர்கள் சுற்றிருக்கும் வெயிலிலும் பொருட்படுத்தாமல் ஆன்மீக பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செய்தது நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.