மேலும் அறிய
TN Roundup: ஸ்டாலின் வார்னிங், விஜய் மீது உதயநிதி அட்டாக், சரிந்த தங்கம் விலை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : ABP
- பீகார் தேர்தல் முடிவு, தேர்தல் ஆணையத்தின் தவறான, பொறுப்பற்ற செயல்களை வெளிப்படுத்துகிறது. தேர்தல் ஆணையம் மீதான நம்பகத்தன்மை தாழ்ந்துள்ளது. நாட்டு மக்களுக்கு அந்த நம்பிக்கை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- புதிய கட்சி தொடங்கியோருக்கு வரலாறு இல்லை; திமுகவின் ஒவ்வொரு தொண்டனுக்கும் வரலாறு உள்ளது. 2026 தேர்தலில் திமுக வெற்றி பெற்று 7ஆவது முறையாக தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் - துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்
- பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது - ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் கொண்டாடப்படும் நிலையில், ஜனவரி 14-ஆம் தேதிக்கான ரயில் முன்பதிவு டிக்கெட் விற்றுத் தீர்ந்தது
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.92,400-க்கு விற்பனை
- SIR மூலம் தேர்தல் ஆணையம் திருடனாக மாறிவிட்டது. தேர்தல் ஆணையத்தை திருடர்களிடமிருந்து பாதுகாக்க, ஜனநாயகத்தை காப்பாற்ற நாம் போராட வேண்டி உள்ளது - ஆ. ராசா
- அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் Centre for Affiliations மையத்தின் இயக்குநர், துணை இயக்குநர்கள், உள்பட முறைகேட்டில் ஈடுபட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு
- இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு (TET) இன்று (நவ.15) தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது - 367 மையங்களில், சுமார் 1.07 லட்சம் ஆசிரியர்கள் தேர்வை எழுதுகின்றனர்.
- இயக்குநர் வி.சேகர் மறைவிற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இரங்கல் செய்தி! இறுதி சடங்கு, அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை நெய்வானத்தம் கிராமத்தில் நடைபெற உள்ளது
- கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சேலம் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்குகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்
- கிருஷ்ணகிரியில் சாதி மறுப்புத் திருணம் செய்த மகன் சுபாஷ் மற்றும் தாயை வெட்டிக் கொன்ற தண்டபாணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது மாவட்ட நீதிமன்றம்.
- ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனியில் நகைக்காக சரஸ்வதி (55) என்ற பெண் வெட்டிக் கொலை. கொள்ளை கும்பல், சரஸ்வதியின் காது, கழுத்தில் இருந்த நகையை பறித்து கொண்டு அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















