7 ips officer transfers: 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் ; தமிழ்நாடு அரசு அதிரடி
சென்னை, பொருளாதார குற்றப் பிரிவு (Financial Institution) காவல் பொது ஆய்வாளராக இருந்த கல்பனா நாயக் ஐ.பி.எஸ், சென்னை ரயில்வே காவல் பொது ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்;
தமிழ்நாடு முழுவதும் 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ராணிபேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் ஐ.பி.எஸ், மதுரை VI பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ், கமாண்டன்ட் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்; மதுரை VI பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு போலீஸ், கமாண்டன்ட் பணியில் இருந்த இளங்கோ ஐ.பி.எஸ், சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்; சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் ஐ.பி.எஸ், ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்;
ராமநாதபுரம் கடலோர காவல் துறை, கண்காணிப்பாளர் ஜெயந்தி ஐ.பி.எஸ், சேலம் மண்டல அமலாக்கத் துறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார் ; சேலம் மண்டல அமலாக்கத் துறை கண்காணிப்பாளராக இருந்த மகேஷ் குமார் ஐ.பி.எஸ், நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்;
சென்னை, பொருளாதார குற்றப் பிரிவு (Financial Institution) காவல் பொது ஆய்வாளராக இருந்த கல்பனா நாயக் ஐ.பி.எஸ், சென்னை ரயில்வே காவல் பொது ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்; பணி விடுப்பில் இருந்து திரும்பிய அபின் தினேஷ் மோதக் , ஐபிஎஸ், சென்னை சென்னை, பொருளாதார குற்றப் பிரிவு காவல் பொது ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த 7ம் தேதி மாநில அரசின் பல்வேறு துறைகளில் இருந்த ஏழு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக, உள்துறை இணைச் செயலாளராக இருந்து வந்த ஏ.ஜான் லூயிஸ், இடமாற்றம் செய்யப்பட்டு நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளராக இருந்த மேரி ஸ்வர்ணா, இடமாற்றம் செய்யப்பட்டு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளராக இருந்து வரும் எம்.லஷ்மி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.
மேலும், வாசிக்க:
7 ias officer transfers: 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு
IAS IPS Transfer : அடிக்கடி நடக்கும் ட்ரான்ஸ்பர்.. மிரளும் அதிகாரிகள் - காரணம் என்ன தெரியுமா?
IPS Officers Transferred | 27 காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு