(Source: ECI/ABP News/ABP Majha)
7 ias officer transfers: 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணைச் செயலாளராக இருந்து வந்த மகேஸ்வரி ரவிக்குமார், இடமாற்றம் செய்யப்பட்டு பொதுப்பணித்துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மாநில அரசின் பல்வேறு துறைகளிலும் இருந்த ஏழு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில்,
"ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணைச் செயலாளராகப் இருந்து வந்த எஸ்.செந்தாமரை, நில நிர்வாக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணைச் செயலாளராக இருந்து வந்த மகேஸ்வரி ரவிக்குமார், இடமாற்றம் செய்யப்பட்டு பொதுப்பணித்துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3. வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராகப் பதவி வகித்து வரும் எம்.அருணா, இடமாற்றம் செய்யப்பட்டு கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராகப் பதவி வகித்து வரும் ஷ்ரவண் குமார் ஜதாவத், வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம், பொது (தேர்தல்) துறை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட உத்தரவு இதன்மூலம் ரத்து செய்யப்படுகிறது.
5. பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளராக இருந்து வரும் மேரி ஸ்வர்ணா, இடமாற்றம் செய்யப்பட்டு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
6. உள்துறை இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் ஏ.ஜான் லூயிஸ், இடமாற்றம் செய்யப்பட்டு நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
7. தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளராக இருந்து வரும் எம்.லஷ்மி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்".
இவ்வாறு, தமிழ்நாடு அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு 12 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டது. இதன்படி சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி யாக தினகரன், திருவாரூர் மாவட்ட எஸ்.பி-யாக விஜயகுமார் ஐபிஎஸ், தஞ்சை எஸ்.பியாக ராவலி பிரியா கந்தப்புனேனி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு சென்னை துணை ஆணையராக ஷியாமளா தேவி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
சிபிசிஐடி எஸ்.பியாக இருந்த விஜயகுமார் ஐ.பி.எஸ்., திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டனர்.மேலும் தேவராணி ஐ.பி.எஸ்., சைபர் க்ரைம் பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டனர், விக்ரமன் ஐ.பி.எஸ்., சி.ஐ.டி., குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டனர்.
மேலும் வாசிக்க:
IAS IPS Transfer : அடிக்கடி நடக்கும் ட்ரான்ஸ்பர்.. மிரளும் அதிகாரிகள் - காரணம் என்ன தெரியுமா?
அதிகாரிகள் டூ அனுபவசாலிகள் - முதல்வர் ஸ்டாலின் ட்ரீம் டீம்
அதிகாரப்போட்டியில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் : இருவரையும் ட்ரான்ஸ்பர் செய்த கர்நாடக அரசு