மேலும் அறிய

IPS Officers Transferred | 27 காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 27 காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதியதாக தி.மு.க. அரசு பதவியேற்றுக் கொண்டது முதல் பல்வேறு துறை செயலாளர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசின் உள்துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் இன்று 27 எஸ்.பி.க்களை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டார். அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,

“ திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் ஐ.பி.எஸ். செங்கல்பட்டு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை, சைபர்கிரைம் பிரிவு எஸ்.பி. சுதாகர், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை, சைபர்பிரிவு சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. சிபி சக்ரவர்த்தி ஐ.பி.எஸ்., திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா ஐ.பி.எஸ்.., ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சி நகர சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் அலட்டிபள்ளி பவன்குமார் ரெட்டி ஐ.பி.எஸ்., திருவண்ணாமலை எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்ரீநாதா ஐ.பி.எஸ்., விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்ட எஸ்.பி. சக்திகணேஷன் ஐ.பி.எஸ்., கடலூர் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டள்ளார். சேலம் நகர குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் மூர்த்தி ஐ.பி.எஸ்., திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். திருப்பூர் நகர துணை ஆணையர் சுந்தரவடிவேல், கரூர் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை, அமலாக்கப்பிரிவு எஸ்.பி. மணி, பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா, அரியலூர் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. நிஷாபார்த்தபன் ஐ.பி.எஸ்., புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யாக மா்றறப்பட்டுள்ளார். திருநெல்வேலி நகர சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் வி.ஆர். சீனிவாசன், திருவாரூர் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜவஹர் ஐ.பி.எஸ்., நாகப்பட்டினம் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.  தென்காசி மாவட்ட எஸ்.பி. சுகுணா சிங்க ஐ.பி.எஸ்., மயிலாடுதுறை எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். டெல்லி, தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு கமாண்டன்ட் அஷிஷ் ராவத் ஐ.பி.எஸ்.,  நீலகரி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த சசிமோகன் ஐ.பி.எஸ். ஈரோடு மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட எஸ்.பி. சஷாங்க்சாய் ஐ.பி.எஸ்., திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் ஐ.பி.எஸ்., சேலம் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை, சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர் ஐ.பி.எஸ். நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை, என்.ஐ.பி. சி.ஐ.டி. எஸ்.பி. கலைச்செல்வன் ஐ.பி.எஸ். தருமபுரி மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.  தேனி மாவட்ட எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். அரியலூர் எஸ்.பி. பாஸ்கரன் மதுரை மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏ.ஐ.ஜி. மனோகர் ஐ.பி.எஸ். விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். திருச்சி ரெயில்வே எஸ்.பி. செந்தில்குமார், சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த டோங்கரே பிரவீன்உமேஷ் ஐ.பி.எஸ்.. தேனி மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த கிருஷ்ணராஜ் ஐ.பி.எஸ்., தென்காசி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். “

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
Embed widget