கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
முதலமைச்சருக்கு இவ்வளவு ஆணவம் நல்லதல்ல என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி விமர்சித்திருந்தார். இதற்கு எதிர்வினையாற்றிய அமைச்சர் துரைமுருகன், அவருக்கு கவர்னர் என்ற திமிர் இருக்கிறது என கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இவ்வளவு ஆணவம் நல்லதல்ல என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கூறியதற்கு அவருக்கு கவர்னர் என்ற திமிர் இருக்கிறது என அமைச்சர் துரைமுருகன் எதிர்வினையாற்றியுள்ளார். சட்டசபை மரபை மாற்றியது ஆளுநர்தான் என்றும் ஆளுநர் கோருவதால் சட்டசபை மரபை மாற்ற முடியாது என வேலூரில் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்.
திமுக அரசு vs ஆளுநர் ஆர்.என். ரவி:
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே தொடர்ந்து அதிகார போட்டி நிலவி வருகிறது. கேரளா, தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, பஞ்சாப், மேற்குவங்கம் என ஆளுநர் - அரசாங்கம் மோதல் நீடிக்கும் மாநிலங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆளுநர் உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து ஆர்.என். ரவி வெளியேறியது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், முதலமைச்சருக்கு இவ்வளவு ஆணவம் நல்லதல்ல என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி விமர்சித்திருந்தார். இதற்கு எதிர்வினையாற்றிய அமைச்சர் துரைமுருகன், அவருக்கு கவர்னர் என்ற திமிர் இருக்கிறது என கூறியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "சட்டசபை மரபை மாற்றியது ஆளுநர்தான். நாங்கள் அல்ல. ஆளுநர் கோருவதால் சட்டசபை மரபை மாற்ற முடியாது" என தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் ஆர்.என்.உரையுடன் தொடங்க இருந்தது. இந்த நிலையில், பேரவை மரபுப்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால், முதலில் தேசிய கீதம்தான் பாடப்பட வேண்டும், மாநில சட்டப்பேரவைகளில் அவ்வாறுதான் பாடப்படுகிறது என்று ஆளுநர் சபாநாயகரையும் முதலமைச்சரையும் வலியுறுத்தி உள்ளார். ஆனால், அது மரபு அல்ல என்றும் தேசிய கீதம் இறுதியில் இசைக்கப்படும் என்றும் சபாநாயகர் மறுத்தார்.
இதனை ஏற்காத ஆளுநர் ரவி, பேரவையில் தன்னுடைய உரையையும் வாசிக்காமல் அவசர அவசரமாக பேரவையை விட்டு வெளியேறினார்.
இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

