மேலும் அறிய

TN Headlines Today: இன்றைய நாளில் இதுவரை தமிழ்நாட்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் ரவுண்டப் இதோ!

TN Headlines Today: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளை கீழே காணலாம்.

உழைப்பாளர் தினத்தையொட்டி சிவப்பு சட்டை அணிந்து சென்று முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள மே தின பூங்காவில் இருக்கும் நினைவுச்சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு, 12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற்றதாக சென்னையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ மசோதா திரும்ப பெறப்பட்டது பற்றி எம்.எல்.ஏக்களுக்கு செய்தி குறிப்பு வாயிலாக தெரிவிக்கப்படும். 12 மணி நேர வேலை மசோதாவை நிறுத்தி வைத்த பின்னரும் அவதூறு பரப்பி வருகின்றனர். வட, தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்த, பெரும் முதலீடுகளை ஈர்க்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரவே 12 மணி நேர வேலை மசோதா கொண்டு வரப்பட்டது. ” என தெரிவித்தார். Factory Bill 12 Hours: மேலும் படிக்க..

தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. திமுக தலைமையிலான கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து மே 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல்முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள்  நிறைவடைய உள்ளது.

தமிழ்நாட்டில்உள்ள 72 கழக மாவட்டங்களுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி ஆகிய அமைப்புகளின் சார்பில் 2023 மே 7, 8, 9 ஆகிய நாட்களில் “திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்"  நடைபெறும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் பங்கேற்று உரை நிகழ்த்தும் சொற்பொழிவாளர்கள் விவரம் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க.

மதிமுகவில் வாரிசு அரசியல் இருப்பதாக குற்றம் சாட்டிய அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமிக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “மதிமுகவின் தற்போதைய செயல்பாடுகள் வருத்தம் அளிக்கிறது. கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் வைகோவின் வாரிசு அரசியலுக்கு எதிரான உணர்ச்சிமிகு உரைகளை கேட்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் உங்கள் பேச்சில் உறுதியும், உண்மையும் இருக்கும் என்று நம்பி ஆதரித்தனர். ஆனால் வைகோவின் குழப்பமான அரசியல் நிலைப்பாடு காரணமாக உங்களை ஆதரித்து திமுகவில் பிரிந்து வந்த பெருவாரியான முன்னணி தலைவர்கள், தோழர்கள் மதிமுகவை விட்டு படிப்படியாக வெளியேறி மீண்டும் திமுகவில் இணைந்து விட்டனர்.  வைகோ தனது மகனை ஆதரித்தது, சந்தர்ப்பவாத அரசியல் செய்வது ஆகிய செயல்கள் மக்கள் மத்தியில் கழகத்தை எள்ளி நகையாட செய்துவிட்டது. உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள் தொடர்ந்து ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது” என தெரிவித்திருந்தார். இதனால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டதோடு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் படிக்க

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில், முதலமைச்சர் மு.க ஸ்டாலினை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். நாளை மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இது வழக்கமான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆட்சி தொடங்கியதில் இருந்தே பல்வேறு அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்கியதால் மக்கள் அவர்கள் மீது அதிருப்தியில் இருந்ததாக செய்திகள் பரவி வந்தது. அதிலும், குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஆடியோ விவகாரத்தில் சிக்கிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கினர். 

இதன் காரணமாக மே மாதத்தில் சில முக்கிய அமைச்சர்களில் பதவிகள் பறிக்கப்பட இருப்பதாகவும், புதுமுகங்கள் சிலருக்கு அமைச்சராகும் வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் படிக்க

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ முரளி மீண்டும்  வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமான சங்கம் என்றால் அது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்தான். தயாரிப்பாளர்களுக்கு என்று இரண்டு மூன்று சங்கங்கள் இருந்தாலும் இந்த சங்கம்தான் முன்னிலை வகிக்கிறது. இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் முரளி தன்னை எதிர்த்து போட்டியிட்ட டி.மன்னனை விட 150 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் இரண்டாவது முறையாக முரளி சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் பொருளாளராக முரளி அணியைச் சேர்ந்த சந்திர பிரகாஷ் ஜெயின் தேர்வு செய்யப்பட்டார். மேலும் வாசிக்க..

சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிகேணி, தி.நகர், மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, கிண்டி, எம்.ஆர்.சி. நகர், மந்தைவெளி, கோடம்பாக்கம், வடபழனி ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான நிலை நிலவுகிறதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம் அதனை சுற்றியுள்ள இடங்களில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. மேலும் வாசிக்க.

விழுப்புரத்தில், கூவாகத்திருவிழாவினை முன்னிட்டு, நடைபெற்ற மிஸ் திருநங்கை 2023 நிகழ்ச்சியில், மூத்த திருநங்கைகளுக்கு நினைவுப் பரிசாக கேடயத்தினை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

கூவாகத் திருவிழா ஆண்டு தோறும் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவில், இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்து கூவாகத்திருவிழாவில் பங்கேற்று செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் நடைபெறும் கூவாகத்திருவிழாவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும் வாசிக்க.

இன்னும் 3 நாளுக்கு அடித்து துவைக்கப்போகும் மழை.. இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் கிழக்கு திசை காற்று, மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக மே 1ம் தேதி (இன்று) முதல் இன்னும் 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாளையும் மழையா? மேலும் வாசிக்க..

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
Tamilnadu Roundup: அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை, தவெக கிறிஸ்துமஸ் விழா, மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை, தவெக கிறிஸ்துமஸ் விழா, மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
முருகா.. பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? இத்தனை ஆரோக்கியமா?
முருகா.. பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? இத்தனை ஆரோக்கியமா?
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
Tamilnadu Roundup: அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை, தவெக கிறிஸ்துமஸ் விழா, மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை, தவெக கிறிஸ்துமஸ் விழா, மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கம் - 10 மணி செய்திகள்
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
முருகா.. பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? இத்தனை ஆரோக்கியமா?
முருகா.. பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? இத்தனை ஆரோக்கியமா?
RSS ”சட்டம்லா ஒன்னும் வேண்டாம், இந்தியா இந்து நாடு தான்” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகவன் பகவத் பேச்சு
RSS ”சட்டம்லா ஒன்னும் வேண்டாம், இந்தியா இந்து நாடு தான்” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகவன் பகவத் பேச்சு
Cyber Crime: ஆன்லைன் சைபர் குற்றங்கள் - சிபிசிஐடி நடத்திய ஹேக்கத்தான் - யுக்தி 2.0வில் நடந்தது என்ன?
Cyber Crime: ஆன்லைன் சைபர் குற்றங்கள் - சிபிசிஐடி நடத்திய ஹேக்கத்தான் - யுக்தி 2.0வில் நடந்தது என்ன?
நாளை முதல் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு
நாளை முதல் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு
Train Ticket Price: டிச.26 முதல்.. ரயில் கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசு - கிலோ மீட்டருக்கு எவ்வளவு? ரூ.600 கோடி லாபம்?
Train Ticket Price: டிச.26 முதல்.. ரயில் கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசு - கிலோ மீட்டருக்கு எவ்வளவு? ரூ.600 கோடி லாபம்?
Embed widget