TN Headlines Today: தமிழ்நாட்டில் இதுவரை நடந்தது என்ன...? முக்கிய செய்திகளின் ரவுண்டப்...!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
EPS On DIG Suicide: டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேசுவதற்கான தகுதியே சட்ட அமைச்சர் ரகுபதிக்கு கிடையாது, என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி “இனியாவது காவலர்கள் தொடங்கி உயரதிகாரிகள் வரை யாராயினும், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு முழுமையான ஓய்வளிக்க வேண்டும். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/edappadi-palaniswami-slams-tamilnadu-minister-raghupath-over-allegation-of-corruption-127583
FIR - DIG Vijayakumar : ’இதை எப்படி பயன்படுத்துவது..’ : தனிப்பாதுகாப்பு காவலரின் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி.. வெளியான பரபரப்பு தகவல்கள்
கோவை சரக டி.ஜ.ஜி.யாக விஜயகுமார் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவரது முகாம் அலுவலகத்தில் நேற்று காலையில் விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை 6.50 மணியளவில் நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்தபோது, அவருடைய மெய் பாதுகாவலர் ரவி என்பவரிடம் கை துப்பாக்கியை வாங்கி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த ராமநாதபுரம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/coimbatore/dig-vijayakumar-committed-suicide-by-shooting-himself-with-the-gun-of-a-security-guard-127535
Senthil Balaji: செந்தில் பாலாஜியிடம் இருந்த கோவை பொறுப்பு அமைச்சர் முத்துசாமிக்கு மாற்றம் - அதிரடி அறிவிப்பு
கோவை வளர்ச்சி திட்டங்கள் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த நிலையில், அவருக்கு பதிலாக அந்த பணிக்கு அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். ஊழல் புகாரில் கைதாகி விசாரணை காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, இதய பைபாஸ் அறுவை சிகிச்சையால் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார். ஊழல் புகாரில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதால் செந்தில் பாலாஜியிடம் இருந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சார துறை அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் தங்கம் தென்னரசுக்கு மாற்றப்பட்டது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/minister-muthusamy-appointed-as-covai-district-incharge-minister-127190
1000 Rs Scheme For Women: உரிமைத்தொகை ரூ.1000 : திருநங்கைகள், தனித்து வாழ்பவர்கள், கைம்பெண்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் - அரசு அறிவிப்பு
1000 Rs Scheme For Women: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு திருநங்கைகள், கைம்பெண்கள், தனித்து வாழும் பெண்கள், திருமணமாகாத பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி துவக்கிவைக்கிறது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/1000-rs-for-ladies-in-tamil-nadu-transgenders-single-womans-will-get-magalir-urimai-thogai-127484
மகளிர் உரிமை தொகை திட்டம் திமுகவினருக்கு மட்டுமே பயன்படும் திட்டமாக மாறப்போகிறது - முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு அமைக்கப்பட்ட மீன்பிடி துறைமுகத்தை அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று மாலை தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டு, மீனவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் மீனவர்களுக்காக அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-women-s-rights-scheme-is-going-to-become-a-dmk-only-scheme-says-ex-minister-jayakumar-tnn-127568