TN Headlines:அண்ணா பல்கலை பி.இ முடிவுகள்! வெப்ப அலையிலும் கிரிவலம் - இதுவரை நடந்தது என்ன?
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
Chitra Pournami 2024: அண்ணாமலைக்கு அரோகரா... கொளுத்தும் வெயிலில் காலணியின்றி கிரிவலம் வந்த பக்தர்கள்
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களும் சிறப்புமிக்க மாதங்களாக கருதப்படுகிறது. அனைத்து மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள் அண்ணாமலையார் கோயிலில் கோலாகலமாக நடைபெறும். திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதங்களிலும் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசிப்பது வழக்கம். ஆண்டிற்கு ஒருமுறை சித்திரை மாதம் வரக்கூடிய சித்ரா பௌர்ணமி என்பது உலக பிரசித்தி பெற்ற ஒன்று.மேலும் படிக்க..
TN Weather Report: தேவையில்லாம வெளியே போகாதீங்க; சேலம்தான் 3வது இடம்: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருகிறது இதனால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இன்னும் மே மாதம் தொடங்காத நிலையில் இந்த ஆண்டு வெப்பநிலை மண்டையை பிளக்கிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில், நேற்று இந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3வது இடம் பிடித்துள்ளது. சேலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 42.3 டிகிரி செல்சியஸ் அதவாது 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஆந்திராவில் 110 டிகிரி பாரன்ஹீட்டும், ஒடிசாவில் 109 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது. மேலும் படிக்க...
Anna University Results: அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
அண்ணா பல்கலைக்கழகத்தின் நவம்பர் / டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதைக் காண்பது எப்படி என்று பார்க்கலாம். தமிழ்நாட்டிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த பல்கலைக் கழகங்களில் ஒன்று அண்ணா பல்கலைக் கழகம். பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக் கழகங்களில் அண்ணா பல்கலைக் கழகம். இந்தப் பல்கலைக் கழகத்திற்கு கீழ் வரும் கல்லூரிகளில் பல லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளை படித்து வருகின்றனர். மேலும் படிக்க
TN Cabinet Reshuffle : “தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றம்” தேர்தலில் சரியாக வேலை செய்யாதவர்களுக்கு வயிற்றில் கரைகிறது புளி..!
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற முடிந்த கையோடு அமைச்சர்கள் எல்லாம் சைலண்ட் மோடிற்கு போய்விட்டார்கள். தலைமைச் செயலகத்திலும் பலரை பார்க்க முடிவதில்லை. தேர்தல் பணியாற்றிய களைப்பில் ஓய்வெடுக்கச் சென்றாலும் சிலரது வயிற்றில் புளி கரைந்துக்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம், அமைச்சரவையில் மறுபடியும் ஒரு மாற்றத்தை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் தயாராகியிருப்பதுதான். மேலும் படிக்க..
கரூர் ரங்கநாதர் சுவாமி ஆலய தேரோட்டம்...கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தேரை இழுத்த பக்தர்கள்
பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் பல்வேறு கிராம கோயில்களில் திருவிழாக்கள் தேரோட்டங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சித்திரை மாதங்களில் பெருமாள் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்டம், மேட்டுத்தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 14.04.2024 அன்று கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மேலும் படிக்க..