பெற்றோர்களே உஷார்;மாணவிகளை குறிவைக்கும் சைபர் கும்பல்! சைலேந்திரபாபு அட்வைஸ்
தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு விழிப்புணர்வு காணொளி ஒன்றை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இன்று (அக்டோபர் 11) வெளியிட்டுள்ளார்.
தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு விழிப்புணர்வு காணொளி ஒன்றை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இன்று (அக்டோபர் 11) வெளியிட்டுள்ளார்.
விழிப்புணர்வு காணொளி:
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்த சைலேந்திர பாபு, 1987ம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். காவல்துறை உதவி கண்காணிப்பாளராக கோபிச்செட்டிபாளையம், சேலம் மற்றும் திண்டுக்கல்லில் பணியாற்றிய சைலேந்திர பாபு, செங்கல்பட்டு, சிவகங்கை, கூடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். பின்னர் காவல்துறை துணை ஆணையாளராக அடையாற்றிலும் பின்,காவல்துறை துணைத் தலைவர் ஆக விழுப்புரம் சரகத்திலும், இணை ஆணையாளராக சென்னையிலும் பணியாற்றினார்.
காவல்துறை துணைத் தலைவர் ஆக திருச்சியிலும், காவல் ஆணையராக கோவையிலும், சென்னை வடக்கு மண்டலத்தின் காவல்துறை துணைத் தலைவராகவும் பணியாற்றினார். 1987 முதல் 2021 வரை தமிழக காவல்துறையில் பல்வேறு பொறுப்புகள் வகித்த சைலேந்திரபாபு, தமிழக காவல்துறையின் உயர்ந்த பொறுப்பான சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்போற்றார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021 மே மாதம் பதவியேற்ற உடன், தமிழக காவல்துறையின் டிஜிபியாக பதவியேற்ற சைலேந்திர பாபு கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதனைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அதோடு அவ்வப்போது இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இச்சூழலில் சைபர் குற்றவாளிகளிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்பது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பெற்றோர்களே உஷார்:
அதில், "பொண்ணு வந்து கல்லூரியில் படிச்சிட்டு இருக்குது; அம்மாக்கு ஒரு போன் கால் வருது; நாங்க போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கூப்பிடுறோம். உங்க மகளை கைது பண்ணி இருக்கிறோம். அவங்க மேல பாலியல் தொழில் புகார் இருக்கு. கையும் களவுமா பிடிச்சுட்டோம்!
அப்படி சொன்னவுடன் அந்த அம்மா மயக்கம் அடைத்து கீழே விழுந்து விடுகிறார்கள். மயக்கம் தெளிந்ததும் நான் என்ன சார் பண்ணனும் என் பிள்ளை தப்பு எதுவும் செய்யவில்லை. என் பிள்ளையை காப்பாற்றி விடுங்கள் என்று சொல்லும்போது .. ஒரு லட்ச ரூபா அனுப்பி வையுங்க எல்லாம் சரியா போகும் சொல்லும் போது... பணத்தை அனுப்பிவிட்டு தன்னோட மகளுக்கு போன் பண்ணா... அந்தப் பிள்ளை எக்ஸாமுக்கு படிச்சிட்டு இருக்கு. இந்த மாதிரி ஒரு செய்தி இன்னொரு தாயாருக்கு வந்திருக்கு.
உங்க பொண்ண போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது பண்ணி இருக்கோம். நீங்க வேண்டுமானாலும் அந்த பொண்ணு கிட்ட பேசுங்கன்னு சொல்லும் போது அந்த பொண்ணு அழுகிறது! அந்த மாதிரி காட்டுகிறார்கள். அந்தப் பெண் கீழே விழுந்து ஹார்ட் அட்டாக் வந்து இறந்தே போச்சு. கூடிய சீக்கிரம் உங்களுடைய பொண்ணு கல்லூரியில் படிச்சுக்கிட்டு இருந்தா உங்களுக்கும் இந்த மாதிரி ஒரு போன் கால் வரும். தயாராக இருங்கள் வந்தவுடன் நீங்கள் இது போன்ற ஏமாந்து விட வேண்டாம்.
இது எல்லாம் சைபர் குற்றவாளிகள் செய்கிற புதிய டெக்னிக். நீங்க பயந்து இல்லாட்டி மயங்கி சந்தேகப்பட்டு உங்க பணத்தை இழந்துடாதீங்க. உங்களுடைய அமைதியான மனதையும் இழந்துடாதீங்க. உடனே கட் பண்ணிட்டு அந்த நம்பர நீங்க பிளாக் பண்ணாலே போதும் "என்று கூறியுள்ளார் சைலேந்திரபாபு.