Sekar Babu Assembly Speech: கேள்வி நேரம் அப்படிங்கிறதால அடக்கி வாசிக்கிறோம்.. அதிமுக எம்.எல்.ஏவால் கடுப்பான சேகர்பாபு
பிப்ரவரி 26 ஆம் தேதி எந்தப் பணிகளெல்லாம் முடிக்கப்படவில்லையோ, எந்த பணிகள் செயல்படாமல் இருந்ததோ அவையனைத்தையும் முதல்வர் திறந்து வைத்து விட்டார்.
சட்டப்பேரவை விவாதத்தில் பேசிய சேகர் பாபு “ கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் வட்டம் மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு கம்பி வட ஊர்தி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படுவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்று பொதுப்பணித்துறையால் அறிக்கை தரப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனன் கோவை மருதமலை முருகன் கோயிலுக்கு பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் அமைத்து தரப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சேகர்பாபு, “ கம்பி வட ஊர்தி இல்லையென்றதும் ரோப் காரை கேட்பீர்கள் என்பது தெரிந்ததுதான் முதல்வர் கடந்த ஆண்டே, அங்கு 11 பேர் கொண்ட வல்லுநர் குழுவை அமைத்து, கள ஆய்வு செய்து, 3 கோடியே 36 லட்சம் 85 ஆயிரம் செலவில் மின் தூக்கி அமைப்பதற்கு அனுமதி அளித்தார். அடுத்த மாதம் அதை முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.” என்றார்
உண்மைக்கு புறம்பான கருத்து
இதனையடுத்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனன், “ சேகர்பாபு உண்மைக்கு மாறான கருத்தை சொல்கிறார். பிப்ரவரி மாதம், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், 3.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்த புள்ளியும் கோரப்பட்டு, அடிக்கல்லும் நாட்டப்பட்டது. அப்படியிருக்கையில் முதல்வர் காணொலி வாயிலாக அதை திறந்து வைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை என்றார்.
கடுப்பான சேகர்பாபு
இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, “ கேள்வி நேரத்தில் குற்ற சாட்டு வேண்டாம் என்பதால் அடக்கி வாசிக்கிறோம். பிப்ரவரி 26 ஆம் தேதி எந்தப் பணிகளெல்லாம் முடிக்கப்படவில்லையோ, எந்த பணிகள் செயல்படாமல் இருந்ததோ அவையனைத்தையும் முதல்வர் திறந்து வைத்து விட்டார். ரோப் கார் வசதிக்கான சாத்திய கூறுகள் இல்லையென்பதால், மின் தூக்கி டெண்டர் விடப்பட்டது. ஆனால் அது சிங்கிள் டெண்டர் என்பதால் அதிமுக ஆட்சியிலேயே அது கைவிடப்பட்டது. அதன் பின்னர் முதல்வர் இட்ட ஆணையின் படி மீண்டும் டெண்டர் கோரப்பட்டு, பணிகள் நடைபெற்றன. அடுத்த மாதம் முதல்வர் அதை திறந்து வைக்கிறார்.” என்றார்
எல்லைக்காக சண்டையிடும் புலிகள்.. புலிகளோடு சண்டையிடும் சிறுத்தைகள்.. ஆச்சர்யத்தில் சுற்றுலா பயணிகள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்