மேலும் அறிய

தமிழை, தமிழர்களை இழிவுபடுத்தியவர் பெரியார்: மீண்டும் மீண்டும் சீண்டும் சீமான்!

பெரியார் குறித்த கருத்துக்கு ஆதாரம் தரும் வரை சீமான் எங்கு சென்றாலும் விட மாட்டோம் என தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் தெரிவித்துள்ளனர். 

பெரியாரை எதிர்ப்பதுதான் என் கொள்கை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசியிருக்கும் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சீமான் வீட்டை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 

பெரியார் குறித்த கருத்துக்கு ஆதாரம் தரும் வரை சீமான் எங்கு சென்றாலும் விட மாட்டோம் என தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக, கடலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அண்ணன் தம்பி பாசம் வேறு, கொள்கை கோட்பாடு முரண் என்பது வேறு. தம்பி விஜய் பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில் அவர் கொள்கை வழிகாட்டி” என கேள்வி எழுப்பினார். மேலும் பெரியாரின் பெண்ணிய உரிமை, பகுத்தறிவு, சமூக நீதி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்தார். இதற்கு பெரியார் பேசாததை பேசியதாக கூறி பொய் பேசி வருகிறார் சீமான் என கண்டனங்கள் குவிந்து வருகின்றன. 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து மீண்டும் விளக்கம் அளித்தார் சீமான். அப்போது பேசிய அவர், “பெரியாரை எதிர்ப்பதுதான் என் கொள்கை. தமிழர்களுக்கு பெரியார் தான் அரண் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்? தமிழை, தமிழர்களை இழிவுபடுத்தியவர் பெரியார். திராவிடம் குறித்த தெளிவு இல்லாமல் பெரியாரை ஆதரித்து பேசி வந்தேன். தற்போது தெளிவாகிவிட்டேன். படிக்க படிக்கத்தான் திராவிடம் என்று கூறுபவர்கள் திருடர்கள் என்று தெரிந்து கொண்டேன். திராவிடம் பேசுபவர்களை ஒழிப்பது, பெரியார் கொள்கைகளை எதிர்ப்பது தான் என் கொள்கை. தமிழ் பேரினத்திற்கு எதிராக சிந்தித்தவர், பேசியவர் பெரியார். பெரியார்தான் எல்லாம் செய்தார் என்றால் எங்கள் முன்னோர் செய்தது என்ன? இனி எங்களுக்கு பெரியார் வேண்டாம். இனி திராவிடத்தை ஒழிப்பதுதான் என் வேலை. திராவிடம் என்ற சொல் ஒழியும். 

தமிழ் மொழியை சனியன் என விமர்சித்தவர் பெரியார். தமிழ், தமிழர் அரசு என்று பேசுவது பித்தலாட்டம் என கூறியது பெரியார். ஆதாரத்தை மறைத்து வைத்துக் கொண்டு கேட்டால் எப்படி கொடுக்க முடியும். பெரியார் எழுத்துக்களை, புத்தகங்களை தற்போது வரை நாட்டுடமை ஆக்கவில்லை ஏன்? நாட்டுமையாக்கிவிட்டு ஆதாரத்தை கேளுங்கள்” என ஆவேசமாக பேசியுள்ளார். 

இதனிடையே பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது திமுக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. திமுக சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேஷ் புகார் அளித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!

ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது

வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்

ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!

எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 

TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!

TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?

Embed widget