திருப்பதியின் பிரமாண்ட திருவிழாக்கள்..2025-ல் எப்போனு தெரிஞ்சுக்கோங்க

Published by: ABP NADU

எல்லா வருடமும் ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதில் திருவிழாக்கள் மிக பிரமாண்டமாக கொண்டாடப்படும்.

அதற்காக இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதிக்கொண்டு வருவர்.

வைகுண்ட ஏகாதசி

மார்கழி மாதத்தின் வளர்பிறை பதினோராம் நாளில் கொண்டாடப்படும். இந்த ஆண்டின் வைகுண்ட ஏகாதசி நாளை(ஜனவரி 10) கொண்டாடப்படும்.

பிரம்மோற்சவம்

திருப்பதியில் கொண்டாடப்படும் வருடாந்திர விழா. புரட்டாசி மாதம், தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு நடைபெறும். இந்த ஆண்டு பிப்ரவரி 18 முதல் 26 வரை நடைபெறும்.

உகாதி அஸ்தனம்

உகாதி என்பது இந்து சூரிய சந்திர நாட்காட்டியின்படி ஆண்டின் முதல் நாள். ஆங்கில நாட்காட்டியின்படி இந்த ஆண்டு மார்ச் 30-ல் திருப்பதியில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும்.

ரத சப்தமி

தை அமாவாசை அடுத்த ஏழாவது நாளில் கொண்டாடப்படும். அன்றை தினம் ‘சிறிய பிரம்மோற்சம்’ என்று அழைக்கப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி ரத சப்தமி நடைபெறும்.