மேலும் அறிய

Seeman Statement: எல்லோரும் ஏத்துக்கிட்டாலும் தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்.. போர் புரிவார்கள்.. அமித்ஷாவின் பேச்சுக்கு சீமான் கண்டனம்..!

இந்தியெனும் ஒற்றைமொழி ஆதிக்கத்துக்கு வழிவகுத்து, இந்தியாவின் தேசிய மொழியாக இந்தி எனும் ஆரிய மொழியை நிறுவ முயலும் பாஜக அரசின் எதேச்சதிகாரச்செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்குரியது. 

ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என உள்துறை அமித்ஷா பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிக்கை  வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பலதரப்பட்ட மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாக விளங்கும் இந்திய ஒன்றியத்தில், அம்மொழிகளுக்குரிய முக்கியத்துவத்தை சரிவிகிதத்தில் தராது. இந்தியெனும் ஒற்றைமொழி ஆதிக்கத்துக்கு வழிவகுத்து, இந்தியாவின் தேசிய மொழியாக இந்தி எனும் ஆரிய மொழியை நிறுவ முயலும் பாஜக அரசின் எதேச்சதிகாரச்செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்குரியது. 

கொடுஞ்செயல் 

ஆட்சியதிகாரத்தில் அமர்ந்தது முதல், பல்வேறு வடிவங்களில் இந்தியை மெல்ல மெல்லத் திணித்திட முயல்வதும், இறந்த சமஸ்கிருத மொழிக்கு உயிரூட்ட வேலைசெய்வதுமான பாஜக அரசின் போக்குகள், மண்ணின் மக்களுக்கெதிரான ஆரியமுகத்தையே அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது. இந்தியாவிலுள்ள தேசிய இனங்களையும், அதன் தனித்துவ அடையாளங்களையும் முற்றாகச் சிதைத்தழித்து ‘இந்து’,’இந்தி’,’இந்தியா’ என ஒற்றையாட்சியை நிறுவி, இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற முயலும் பாஜகவின் கொடுங்கோல் நடவடிக்கைகள் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், இறையாண்மைக்கும் எதிரான கொடுஞ்செயல்களாகும்.

தமிழர்கள் ஏற்க மாட்டார்கள் 

பாஜக அரசின் இந்தித்திணிப்பை இந்திய நிலப்பரப்பு முழுவதும் வாழும் ஒட்டுமொத்தத் தேசிய இனங்களும் ஏற்றாலும், தமிழ்நாடும், தமிழர்களும் எதிர்த்து நின்று சமரசமில்லாது சமர்புரிவோமெனப் பேரறிவிப்பு செய்து, பாகிஸ்தான் நாடு செய்திட்ட மொழித்திணிப்பினால்தான் வங்காளதேசம் எனும் நாடு பிறந்ததெனும் வரலாற்றுச்செய்தியை நாட்டையாளும் பாஜகவின் ஆட்சியாளர்களுக்கு இத்தருணத்தில் நினைவூட்டுகிறேன்.” என்று அதில் அவர் தெரிவித்துள்ளார். 

அமித்ஷாவின் பேச்சு 

நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “நாட்டின் அலுவல் மொழியாக இந்தியை நடைமுறைப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இது இந்தி மொழியில் முக்கியத்துவத்தை அதிகரிக்கும். வேற்று மாநில மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளும்போது பயன்படுத்த வேண்டிய மொழி இந்திதான். ஆங்கிலம் அல்ல. ஒரு மாநிலத்தின் உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக இல்லாமல், ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

மேலும் கூறுகையில், ”பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வுத்தன்மையுடன் மாற்றாத வரையில், அந்த மொழியை மக்களிடம் பரப்ப முடியாது. மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 22,000-க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் அடிப்படை அறிவைக் கொடுக்கவேண்டியது அவசியம். இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும்போது, ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும். இந்தி மொழியாக இருக்க வேண்டும்.’ என்று பேசினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
TN Congress New Leader: IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.? ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.. ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
ஏமாந்து போன இளம்பெண்.. WFH வேலை வாங்கி தருவதாக 15 லட்சம் அபேஸ்.. மோசடி கும்பலின் பலே டெக்னிக்
"நல்ல சம்பளம் வாங்கி தரோம்" WFH வேலை வாங்கி தருவதாக மோசடி.. 15 லட்சம் அபேஸ்! 
Embed widget