மேலும் அறிய
Advertisement
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் பகுதியில் கழிவுநீர் கலக்காமல் இருக்க காடுகள் வளர்க்க திட்டம்
சுத்திகரிப்பு செய்யப்பட்ட தண்ணீர், 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓலைகுடா எனும் பகுதியில் குழாய் மூலம் கொண்டு சென்று அங்கு காடுகளை வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது என நகராட்சி தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம்.
கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓலைகுடா எனும் பகுதியில் குழாய் மூலம் கொண்டு சென்று அங்கு காடுகளை வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 52 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. ராமேஸ்வரம் நகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல். இந்த விபரங்களை ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி, பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த பகுதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உத்தரவிட கோரிய மனு. இந்த மனுவை யானை ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்துள்ளார்
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோயிலுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ராமநாத சுவாமி கோயில் பகுதியில் இருந்து அக்னி தீர்த்தம் செல்வதற்கான சாலை மற்றும் கோயிலை சுற்றி உள்ள சாலைகள் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. அக்னி தீர்த்தம் அருகே ராமேஸ்வரம் நகராட்சியில் இருந்து வெளிவரும் கழிவுநீர் கடலில் கலக்கிறது. பக்தர்கள் புனித நீராக கருதப்படும் அக்னி தீர்த்தம் அருகே கழிவுநீர் கலப்பதால் கடல் நீர் அசுத்தமாகிறது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ராமேஸ்வரம் கோயிலில் உள்ள அக்னி தீர்த்தம் அருகே நகராட்சி கழிவுநீர் கடலில் கலப்பதை தடுத்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியகிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
ராமேஸ்வரம் மாநகராட்சித் தரப்பில், வழக்கறிஞர் சரவணன் ஆஜராகி. "சுத்திகரிப்பு செய்யப்பட்ட தண்ணீர், 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓலைகுடா எனும் பகுதியில் குழாய் மூலம் கொண்டு சென்று அங்கு காடுகளை வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 52 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் எதிர்காலத்தில் கோயில் பகுதியில் கழிவு நீர் கலப்பதை முற்றிலும் தடுக்க முடியும் என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், இந்த விபரங்களை ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி, பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திருவண்ணாமலை
தமிழ்நாடு
ஆட்டோ
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion