IPL Auction 2025 : 182 வீரர்கள், 639.15 கோடி செலவு செய்த அணிகள்.. ஏலத்தில் கொட்டிய பணமழை! முழு விவரம்
IPL Auction 2025: 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 182 வீரர்கள் , 639 கோடிக்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளன்ர்
ஜெட்டாவில் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தின் போது 10 அணிகள் செலவழித்த பணத்தின் முழு விவரத்தை இந்த தொகுப்பில் காண்போம்.
ஐபிஎல் ஏலம்:
ஜெட்டாவில் நடந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் 10 ஐபிஎல் அணிகளும் தங்களது அடுத்த மூன்று சீசன்களுக்கான அணியை தேர்வு செய்து முடித்தனர்.
இந்த ஏலத்தில் அதிகப்பட்ச தொகைக்கு ரிஷப் பண்ட்டை 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் , அதே நேரத்தில் ஷ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணிக 26.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
இதையும் படிங்க:IPL Team Owners: "CSK முதல் RCB வரை" 10 அணிகளுக்கும் ஓனர் யாரு தெரியுமா? இதைப் படிங்க!
வெளிநாட்டு வீரர்களில் அதிகப்பட்சமாக 15.75 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஜோஸ் பட்லர் வாங்கப்பட்டார். இதன் மூலம் இந்த மெகா ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர் ஆனார் பட்லர். இந்த ஏலத்தில் 204 ஸ்லாட்டுகளில், 182 இடங்கள் நிரப்பப்பட்டன, இந்த ஏலத்தில் வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் செலவு செய்த பணத்தின் மதிப்பு ரூ.639.15 கோடின் ஆகும்,இதற்கு முன்னால் கடந்த 2022 ஆம் ஆண்டில் நடந்த மெகா ஏலத்தில் ரூ.551.70 கோடி செலவிடப்பட்ட நிலையில் தற்போது அதனை இந்த ஏலமானது முறியடித்துள்ளது.
#TATAIPLAuction ✅
— IndianPremierLeague (@IPL) November 26, 2024
Here are the Top 🔟 Buys after the 2⃣-day Auction Extravaganza 🔽#TATAIPL pic.twitter.com/rOBAtJE0iZ
ஐபிஎல் செலவு செய்த பணத்தின் விவரம்:
அணிகள் | பணம் செலவு செய்யபட்ட விவரம் | மீதமுள்ள தொகை |
சென்னை சூப்பர் கிங்ஸ் | 55.95 கோடி | 5 லட்சம் |
மும்பை இந்தியன்ஸ் | 44.80 கோடி | 20 லட்சம் |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | 82.25 கோடி | 75 லட்சம் |
குஜராத் டைடன்ஸ் | 68.85 கோடி | 15 லட்சம் |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 50.95 கோடி | 5 லட்சம் |
சன் ரைசர்ஸ் ஐதராபாத் | 44.80 கோடி | 20 லட்சம் |
பஞ்சாப் கிங்ஸ் | 110.85 கோடி | 35 லட்சம் |
டெல்லி கேபிடல்ஸ் | 72.80 கோடி | 20 லட்சம் |
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 68.90 கோடி | 10 லட்சம் |
ராஜஸ்தான் ராயஸ் | 40.70 கோடி | 30 லட்சம் |
மொத்த விவரம் | 639.15 கோடி |