மேலும் அறிய

சொத்து குவிப்பு வழக்கு: ஆஜரானார் எம்.எஸ்.விஜயாபாஸ்கர்; விஜிலென்ஸ் தீவிர விசாரணை!

சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கரும், அவரது சகோதரர் சேகர் ஆகியோர் ஆஜராகினார்கள்.

சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜூலை 22ஆம் தேதி அதிமுக முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது. இதுதொடர்பாக விஜயபாஸ்கர் மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. 

இரண்டாவது முறையாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கரும், அவரது சகோதரர் சேகர் ஆகியோர் ஆஜராகினார்கள். அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர். அவர் வருமானத்துக்கு 55 சதவீதத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஜூலை மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2016 ஆம் ஆண்டு ரூ.2.51 கோடியாக இருந்த  சொத்து, 2021ல் ரூ.8.62 கோடியாக அதிகரித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கரூர் மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடுகள், அலுவலகங்கள், அவருக்கு தொடர்புடைய இடங்கள் என 20 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ.25.56 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள், காப்பீட்டு நிறுவன முதலீடுகள், நிறுவனங்களில் செலுத்தப்பட்ட, பெறப்பட்ட பண பரிவர்த்தனைகள் போன்ற முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட அறிக்கையின் முழுவிவரம்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி 
விஜயலட்சுமி, அவரது தம்பி சேகர் ஆகியோர் பெயரிலும் மற்றும் தான் பங்குதாரராக உள்ள
நிறுவனங்கள் பெயரிலும் தனதுபணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்துள்ளது சம்பந்தமாக அவர்கள் மீது கடந்த 21.07.2021ஆம் தேதி கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் குற்ற எண்.5/AC/2021 பிரிவு 13(2) r/w 13(1)(b) of the PC (Amendment) Act, 2018 மற்றும் பிரிவு 12 r/w 13(2) r/w 13(1)(b) of the PC (Amendment) Act, 2018-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. மேற்படி வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட மொத்தம் 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் இன்று 22.07.2021ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பணம் ரூ.25,56,000/- மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள்மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

"பணத்தை கொடு...வெளியே சொன்னா வெட்டுவோம்" – டீ கடையில் அரங்கேறிய திகில் சம்பவம்
"வாழ்க்கையை சீரழித்த குடி" பிரிந்து சென்ற மனைவியை அழைக்கச் சென்ற கணவனுக்கு நேர்ந்த சோகம்
கல்லில் புதைந்த வரலாறு... ஆதிவாலீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு பிரதியெடுக்கும் பயிற்சி!
கல்லில் புதைந்த வரலாறு... ஆதிவாலீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு பிரதியெடுக்கும் பயிற்சி!
"எம்.எல்.ஏ கேட்டதும் தர்றீங்க" செவிலியர்களுக்கு ஏன் இல்ல ? போராட்டத்தில் இறங்கிய நடிகை கஸ்தூரி

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget