Prabhakaran: பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்- பழ . நெடுமாறன் பரபரப்பு பேட்டி..!
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும், இது பிரபாகரன் குடும்பத்தினர் தெரிவித்த தகவல் என்றும் அவர் விரைவில் வெளியே வருவார் என்றும் கூறியுள்ளார். பிரபாகரன் குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, ”சர்வதேச அரசியல் சூழலும், இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்த வெடித்துச் சிதறியுள்ள சிங்கள மக்களின் போராட்டமும், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை தற்போது உருவாகியுள்ளது. இந்த சூழலில் தமிழீழ தலைவர் நலமுடன் இருக்கிறார் என்பதை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், அவர் “ இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்தியாவிற்கு எதிராக சீனா செயல்படுகிறது இதனை தடுக்க முற்பட வேண்டும். இது பிரபாகரன் குடும்பத்தினர் தெரிவித்த தகவல் என்றும் அவர் விரைவில் வெளியே வருவார். பிரபாகரன் குடும்பத்தினர் என்னுடன் தொடர்பில் இருக்கின்றனர். பிரபாகரன் உள்ள இடத்தை தற்போது கூற முடியாது. பிரபாகரனின் அனுமதியுடன் இதனை வெளிப்படுத்துகிறேன் என்றும்” அவர் கூறியுள்ளார்.
மேலும், பிரபாகரன் எங்கே இருக்கிறார் எப்போது வருவார் என்பது எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்களுக்கும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.இந்த சூழ்நிலையில் இந்திய மக்களுக்கு ஆதரவாக ஈழத் தமிழர்கள் இருப்பார்கள் எனவும் இந்த செய்தி ஈழத் தமிழர்களுக்கு நன்மையும் கொடுக்கும் நம்பிக்கையும் கொடுக்கும்” எனவும் அவர் தெரிவித்தார்.
பழநெடுமாறன் பேட்டி குறித்து வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் கூறியதாவது, “ பழநெடுமாறன் கூறியது உண்மை, பிரபாகரனும், அவரது மனைவியும், அவரது மகள் துவாராகாவும் உயிருடன் இருப்பதாக எங்களுக்கு ஏற்கனவே தகவல் வந்தது. அதனை பழநெடுமாறன் உறுதி செய்துள்ளார். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவர் வருவார் உரிய பணிகளைச் செய்வார். காலம் அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தரும். சீனாவின் ஆதிகத்தை எதிர்க்க பிரபாகரன் வந்து இந்தியாவுக்கு ஆதரவாக செயல்படுவார்” என அவர் கூறியுள்ளார்.