செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பின; நோயாளிகள் வெளியில் காத்திருப்பு
செங்கல்பட்டில் வேகமாக நிரம்பி வரும் படுக்கைகள் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிக அளவு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2181 நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது மருத்துவமனை மற்றும் வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்ட வைரஸ் தொற்றால் பாதிக்கப்படடோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 978.
கடந்த வாரம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சன் பற்றாக்குறை காரணமாக 13 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
மருத்துவமனையில் மொத்தம் 480-படுக்கைகள் உள்ளது. இதில் 325- படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதி உள்ளது. மீதமுள்ள 155 படுக்கைகள் சாதாரண படுக்கைகள்.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி உள்ள 325- படுக்கைகளும் நிரம்பியதாக கூறப்படுகிறது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள நோயாளிகள் வெளியே காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக நோயாளிகள் மயக்கமடைந்து மருத்துவமனையின் வாயிலிலும், மரத்தடிகளிலும் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.
பலர் மூச்சு திணறலால் தவிக்கும் நிலையில் அவர்களுக்கான மாற்று ஏற்பாடு குறித்தும் மருத்துவமனை நிர்வாகம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து கேட்டபோது முறையான பதில் அளிக்க மறுப்பதாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாற்று ஏற்பாடு செய்து அவர்களுக்கு படுக்கை வசதிகள் ஏற்படுத்தி ஏற்பாடுகள் நடந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர்கள் தரப்பில் பதில் கூற மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டனர். ஏற்கனவே செங்கல்பட்டு மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையில் பலர் உயிரிழந்த நிலையில், ஆக்சிஜன் இருப்பு குறித்து கண்காணிக்க சப் கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டது. ஆனாலும் இன்னும் படுக்கை பற்றாக்குறை நிலவுகிறது. தீவிர நிலையில் வரும் பலருக்கும் இன்னும் போதிய வசதி கிடைக்கவில்லை. சென்னைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் அதிதீவிர நிலையில் நோயாளிகள் வரும் பகுதியாக செங்கல்பட்டு உள்ள நிலையில் இது போன்ற காத்திருக்கும் சூழல் இல்லாமல் போதிய படுக்கை வசதிகள் கிடைக்க அரசு தரப்பில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு குழு, தங்கள் பணியில் முழு கவனம் செலுத்தி வரக்கூடிய நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் கடந்த வாரம் நடந்தது போன்ற கசப்பான சம்பவங்களை தவிர்க்க முடியும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

