குளித்தலை தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு - பொதுமக்கள் கவலை
குளித்தலை கல்வி மாவட்டத்தில் 150க்கும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது அறிவிக்கப்பட்ட நல்லாசிரியர் விருதுக்கு இந்த தொகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படவில்லை.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குளித்தலை சட்டசபை தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திற்கு சென்றார். முற்றிலும் விவசாயம் சார்ந்த தொகுதியான குளித்தலையில் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் அதற்குரிய பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது.
மருதூர் காவிரி ஆற்றின் குறுக்கே 750 கோடி ரூபாய் மதிப்பில் கதவணைகள் கட்டுதல், மேட்டு மருதூரில் வடிகால் வாய்க்காலில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டுதல் குளித்தலையில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுதல், பஞ்சபட்டி ஏரிக்கு காவிரியிலிருந்து உபரி நீரை கொண்டு வருதல், குளித்தலை மணப்பாறை நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டுதல் போன்ற வாக்குறுதிகளை அரசியல் கட்சியினர் ஒவ்வொரு தேர்தல் போது அளிக்கின்றனர். ஆனால், அவை எதுவும் நிறைவேற்றப்படுவது கிடையாது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, அரசு தலைமை மருத்துவமனை கரூர் மாவட்டம் மருத்துவமனைக்கு இணையாக செயல்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான பெயர் பலகை கூட வைக்கப்படவில்லை. பல தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குளித்தலை கல்வி மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது அறிவிக்கப்பட்ட நல்லாசிரியர் விருதுக்கு இந்த தொகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படவில்லை.
கரூரில் போதிய இடம் இல்லாமல் செயல்படும் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தினை திணை இன்னுங்கூர் மாநில விதைப்பண்ணையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பொதுமக்களின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது என கவலை தெரிவித்துள்ளனர்.