TN GOVT Free Housing Patta : 23.56 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா.! சூப்பரான தகவலை சொன்ன தமிழக அரசு
TN GOVT Free Housing Patta : ஏழை எளிய மக்கள் வீடு கட்டிக்கொள்ள தலா ரூ. 3 இலட்சத்து 50 ஆயிரம் வீதம் 2 இலட்சம் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.7,000 கோடி மதிப்பிலான திட்டம் தொடர்பாக தெரிவித்துள்ள தமிழக அரசு, 23.56 இலட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா தொடர்பான தகவலையும் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு திட்டங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் புதிய புதிய அறிவிப்புகளை ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்கட்சியான அதிமுக வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு சார்பாக நிறைவேற்றப்பட்ட திட்டங்களை வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கலைஞர் கனவு இல்லம், இலவச பட்டாக்களை தொடர்பாக முக்கிய தகவலை கூறியுள்ளது.
கலைஞர் கனவு இல்லம்
தமிழ்நாட்டில் உள்ள குடிசைகள் எல்லாவற்றையும் அகற்றிவிட்டு எல்லோர்க்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பது திராவிட மாடல் அரசின் இலக்கு. இதற்காக 2030 ஆம் ஆண்டிற்குள் 8 இலட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட வேண்டும் என முடிவு செய்துள்ளது. ஏழை எளிய மக்கள் வீடு கட்டிக்கொள்ள தலா ரூ. 3 இலட்சத்து 50 ஆயிரம் வீதம் 2 இலட்சம் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.7,000 கோடி மதிப்பிலான திட்டத்தை அனுமதித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் இரண்டே ஆண்டுகளில் 2 இலட்சம் வீடுகளில் 1,79,850 கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மீதி வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த ஆண்டில் மேலும் 1 இலட்சம் வீடுகள் ரூ. 3500 கோடியில் கட்டப்படும் என அறிவித்துள்ளது திராவிட மாடல் அரசு.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மட்டும் அல்ல!
இலங்கை தமிழர்களுக்கு ரூ.589 கோடி ஒதுக்கீட்டில் 10,045 நிரந்தர வீடுகள் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு 7,469 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.
மேலும் தொடர்ந்து 1 இலட்சத்து 79 ஆயிரத்து 850 வீடுகள் கட்டப்படுகின்றன.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டத்தின்கீழ் ரூ.8,384 கோடியில் 58,211 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு; மேலும் 53,467 வீடுகளின் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
வீட்டுமனை பட்டாக்கள்
2021-2026 திராவிட மாடல் ஆட்சியில் 23.56 இலட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
பழங்குடியினர் நலம் நாடும் தொல்குடி திட்டத்தில் ரூ. 221 கோடி மதிப்பீட்டில் 7,674 பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
ஒற்றைச் சாளர முறை திட்டம்
24,446 மனைப்பிரிவு விண்ணப்பங்களுக்கும், 2002 கட்டட அனுமதி விண்ணப்பங்களுக்கு திராவிட மாடல் அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆகமொத்தம், திராவிட மாடல் அரசு 2021 முதல் ஐந்து ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழைகளுக்காக 4,29,394 வீடுகளைக் கட்டியுள்ளது. ரூ.482 கோடியில் ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளில் 5,281 கட்டமைப்புப் பணிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 23.56 இலட்சம் ஏழைகளின் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















