Watch Video | என்னை தொட முடியாததால் உடன் இருப்பவர்களை கைது செய்கிறார்கள் - சீமான்
என்னை தொட முடியாததால் என்னுடன் இருப்பவர்களை கைது செய்கிறார்கள் - சீமான்
![Watch Video | என்னை தொட முடியாததால் உடன் இருப்பவர்களை கைது செய்கிறார்கள் - சீமான் Naam tamilar katchi seeman slams DMK govt after Scuffle breaks out between DMK NTK cadres Himler Watch Video | என்னை தொட முடியாததால் உடன் இருப்பவர்களை கைது செய்கிறார்கள் - சீமான்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/22/2225ea7fcb83f3242e7ebcbdeab6ea73_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் நடந்த கூட்டமொன்றில், நாம் தமிழர் கட்சியினரை சங்கி என சொல்லப்படுவது குறித்து பேசுகையில், தன்னுடைய காலணியை எடுத்து மேடையிலேயே காண்பித்தார்.
கட்சியின் தலைமையில் இருந்துகொண்டு பொதுவெளியில் சீமான் இப்படி நடந்துகொண்டது பலரை முகம் சுளிக்க வைத்தது. இதுவரை வாயில் மட்டுமே அநாகரீகத்தை கொண்டிருந்த சீமான் தற்போது தன்னுடைய செயலிலும் அதை காண்பிக்க ஆரம்பித்துவிட்டார் என்ற விமர்சனமும் வைத்தனர்.
இந்த சூழலில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஹிம்லர் என்பவர் இஸ்லாமியர்களுக்கு திமுக துரோகி எனவும், திமுகவை கருவறுக்க வேண்டுமெனவும் மேடையில் பேசினார். அப்போது அங்கிருந்த திமுகவினர் உடனடியாக மேடையில் ஏறி மேடையில் இருந்தவர்களை தாக்க முயன்றனர்.
அதிகாரத்திமிரில் அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல் வெட்கக்கேடானது!https://t.co/hurLKEg1dP@CMOTamilnadu @mkstalin
— சீமான் (@SeemanOfficial) December 21, 2021
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாகவும், பெரிய கட்சியாகவும் இருக்கும் திமுகவினர் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கக்கூடாது என ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். திமுகவினரின் இந்த செயலுக்கு சீமானும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்கள் கேட்பது இஸ்லாமியர்களின் விடுதலையைத்தான். இதில் திமுகவை விமர்சனம் செய்ய எதுவும் இல்லை.
திமுக பழிவாங்குகிறது. கருத்தை கருத்தால் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம். என்னை தொட முடியாததால் என்னுடன் இருப்பவர்களை கைது செய்கிறார்கள். நான் கூட்டத்தில் பேசியபோது காலணி காட்டியதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Parliament Winter Session: தொடர்ந்து அமளி: நாடாளுமன்றம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு !
ரியல் எஸ்டேட் தலைநகரமான அயோத்தி… நிலம் வாங்கிக் குவிக்கும் முக்கியப்புள்ளிகள்; முழு ரிப்போர்ட்!
Yearender 2021: மாஸ்டர் முதல் மாநாடு வரை.. 2021ல் தியேட்டரில் கொண்டாடப்பட்ட திரைப்படங்கள்!
ABP Nadu Exclusive: ‛அந்த வலிக்கு பதில் சொல்லியே ஆகணும்..’ - இயக்குனர் சேரன் சிறப்பு பேட்டி!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)