MK Stalin: "லண்டனில் மன்னருடன் கைகுலுக்க மறுத்தவர்" - இரட்டைமலை சீனிவாசரின் பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் டுவீட்!
"ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடிவுக்காக ஓயாமல் குரல் கொடுத்த 'திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனாரின் பங்களிப்புகளை நன்றியுடன் நினைவுகூர்வோம்! சமத்துவத்துக்கான பயணத்தில் சமரசம் தவிர்த்து வெல்வோம்!"

நவீன இந்திய அரசியல் உரையாடலில் சீர்திருத்த மற்றும் சமூக முற்போக்கான சிந்தனைகளை அறிமுகப்படுத்துவதில் ஒரு முன்னோடியாக இருந்த மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான ரெட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாளான இன்று தமிழ்நாடு முதல்வர் வாழ்த்து செய்தி ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பலரும் பின்தொடரும் கொள்கைகள்
நீதிக்கட்சியில் தொடங்கி, பின்னர் காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சிகள் வரை அதிகாரத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் இந்த கொள்கைகளை மரபுரிமையாகக் கொண்டு இந்த கொள்கைகளின்படி மாநிலத்தை ஆள முயன்று வரும் நிலையில் பலர் அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
தான் பெற்ற கல்வியறிவைக் கொண்டு, ஆதிதிராவிடர்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாள்!
— M.K.Stalin (@mkstalin) July 7, 2023
இலண்டன் சென்று ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்தபோதும், அச்சம் என்பதே இன்றி, அவருடன் கைக்குலுக்க மறுத்து, இந்தியாவில் நிகழ்ந்து வரும்… pic.twitter.com/mTVAOTOZKu
முதல்வர் ஸ்டாலின் டுவீட்
குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடைய பிறந்த நாளான இன்று ஒரு பெரிய டுவீட்டை பகிர்ந்து அதோடு ஒரு கார்டையும் இணைத்துள்ளார். "தான் பெற்ற கல்வியறிவைக் கொண்டு. ஆதிதிராவிடர்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாள்!", என்று தொடங்கும் அந்த பதிவு பலரை சென்று அடைந்துள்ளது.
அவரது நெஞ்சுரம் குறித்து முதல்வர்
"இலண்டன் சென்று ஐந்தாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்தபோதும், அச்சம் என்பதே இன்றி. அவருடன் கைக்குலுக்க மறுத்து, இந்தியாவில் நிகழ்ந்து வரும் தீண்டாமைக் கொடுமைகளை எடுத்துக்கூறியதுதான் அவரது நெஞ்சுரம். வட்டமேசை மாநாட்டில் அண்ணல் அம்பேத்கருடன் நகமும் சதையும் போல இணைந்து தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் பேசினார்," என்று அந்த பதிவில் எழுதி உள்ளார் தமிழ்நாடு முதல்வர்.
ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடிவுக்காக குரல் கொடுத்தவர்
மேலும் அதில், "ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடிவுக்காக ஓயாமல் குரல் கொடுத்த 'திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனாரின் பங்களிப்புகளை நன்றியுடன் நினைவுகூர்வோம்! சமத்துவத்துக்கான பயணத்தில் சமரசம் தவிர்த்து வெல்வோம்!" என்று எழுதியுள்ளார்.
ரெட்டமலை சீனிவாசன் காந்தி மற்றும் அம்பேத்கர் இருவருடனும் உரையாடிய சில சீர்திருத்தவாதிகளில் ஒருவர் ஆவார். இவரின் முக்கியப் பணி தலித்துகளின் மேம்பாட்டை மையமாகக் கொண்டிருந்தாலும், அவரது பங்களிப்புகள் தமிழ்ச் சமூகத்தின் சமூகச் சீர்திருத்தத்திற்கு பெரிய அளவில் உதவியது. நவீனத்துவத்தையும், அதனால் முற்போக்கான அரசியல் சிந்தனைகளையும், மற்ற சமூகங்களை விட மிகவும் முன்னதாகவே ஒடுக்கப்பட்டவர்கள் எதிர்கொண்டு மேலே எழுந்து வர பெரும் உதவியாக இருந்த தலைவர் என்று இவர் பாரட்டப்படுகிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

