கல்வித்துறையில் தொழில் நுட்பம் பல பாய்ச்சல்களை நிகழ்த்தியுள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
நாடுகள், சமூகங்கள் மட்டுமின்றி தனி நபர்களுக்கும் தொழில்நுட்பம் முன்னேற்றத்தை அளித்துள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இவர் தற்போது தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இவர் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கே.ஒய்.என். ஹூட் டெக்னாலாஜிஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள KYN என்ற செயலியை அறிமுகப்படுத்தினார்.
தொழில்நுட்ப வளர்ச்சி:
பின்னர், இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது, “தொழில்நுட்பம் பல்வேறு நாடுகள், சமூகங்கள் மட்டுமில்லாது தனி நபர்களுக்கும் முன்னேற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக கல்வித்துறையில் தொழில்நுட்பம் பல்வேறு பாய்ச்சல்களை நிகழ்த்தியுள்ளது. ஒருகாலத்தில் படிப்பதற்கே பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த நிலை மாறி, தற்போது பட்டயக் கல்வியைக் கூட இலவசமாக இணையத்தில் படிக்க முடிகிற நிலை ஏற்பட்டுள்ளது.
அப்படியான ஒரு சூழலில் KYN App அறிமுகவிழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு சமூக வலைதளம் உள்ளூர் தொழில்முனைவோர், உள்ளூர் திறமையாளர்கள், சமூக குழுக்கள் என ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள வழி அமைத்துக்கொடுக்கும் என்பதை எண்ணும்போதே பெருமையாக இருக்கிறது. இதன் மூலம், ஆரோக்கியமான இணைய சமூகம், இணைய பயன்பாடு நிச்சயம் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை."
இவ்வாறு அவர் பேசினார்.
சித்தார்த், மாதவன் பங்கேற்பு:
இந்த செயலி அறிமுக நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மட்டுமின்றி மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன், நடிகர்கள் சித்தார்த், மாதவன்2, கே.ஒய்.என். நிறுவன தலைமைச் செயல் அதிகாரி காயத்ரி தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
2000ம் ஆண்டிற்கு பிறகு தொழில்நுட்ப வளர்ச்சி உலகம் முழுவதும் அதீத வேகத்தில் வளர்ந்து வருகிறது. இந்தியாவிலும் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் அடங்கும். தமிழ்நாடு அரசும் இணையதள வளர்ச்சியை மக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வருகிறது. அதற்காக கோடிக்கணக்கில் முதலீடுகளை ஆண்டுதோறும் செய்து வருகிறது.
இணையதள தொழில்நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை ஆண்டுதோறும் நடவடிக்கை எடுத்து வருகிறது. நிதிநிலை அறிக்கையிலும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக கோடிக்கணக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: Crime: மது பழக்கத்தால் நடந்த விபரீதம்.. மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த கர்ப்பிணி.. என்ன நடந்தது?
மேலும் படிக்க: Trisha: அருவருப்பாக உள்ளது! அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி மீது சட்ட நடவடிக்கை - நடிகை திரிஷா அறிவிப்பு